‘விக்ரம் 58’-ல் இணைந்த சூப்பர் ஸ்டார் - உலகநாயகனின் வெற்றிப்பட இயக்குநர்!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 12, 2019 10:50 AM
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் இணைந்துள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
![Director K.S.Ravikumar joins the casts of Chiyaan Vikram's Vikram 58 Director K.S.Ravikumar joins the casts of Chiyaan Vikram's Vikram 58](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/director-ksravikumar-joins-the-casts-of-chiyaan-vikrams-vikram-58-photos-pictures-stills.jpg)
‘கடாரம் கொண்டான்’ திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தை ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய த்ரில்லர் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF படத்தின் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்ஃபான் பதான் நடித்து வருகிறார். சுமார் 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற இப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட ஷூட்டிங் பணிகள் கேரளாவில் தொடங்கியதாக தெரிகிறது.
இந்நிலையில், இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், உலகநாயகன் கமல்ஹாசன் உள்ளிட்ட ஹீரோக்களின் வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் படக்குழுவில் இணைந்துள்ளார். இப்படத்தில் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.