தளபதி விஜய் ஸ்டைலில் ‘சீயான் 58’ அப்டேட் சொன்ன பிரபல கிரிக்கெட் வீரர்
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 05, 2019 03:54 PM
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் குறித்த தகவலை நடிகராக அறிமுகமாகும் பிரபல கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான் தெரிவித்துள்ளார்.

‘கடாரம் கொண்டன்’ திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தை ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய த்ரில்லர் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF படத்தின் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்ஃபான் பதான் நடித்து வருகிறார்.
முதன்முறையாக நடிப்பில் களமிறங்கியுள்ள கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், விக்ரம் 58 திரைப்படத்தின் முக்கிய தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். தமிழில் அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், ‘வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி. முதல் ஷெடியூல் நல்ல படியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க "I'm waiting"’ என தெரிவித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வணக்கம் மக்களே.. நடிப்புலகில் முதல் படி எடுத்து வைக்கும் எனக்கு மிகவும் உதவியாய் இருந்த தமிழ் மக்களுக்கு நன்றி.. 🙏🙏 முதல் schedule நல்லபடியா முடிஞ்சாச்சு.. மீண்டும் எல்லாரையும் சந்திக்க "I'm waiting" 🙏😁 #ChiyaanVikram58 pic.twitter.com/gNczgT27oq
— Irfan Pathan (@IrfanPathan) November 5, 2019