ஏ.ஆர்.ரகுமானுடன் சீயான் விக்ரமின் ‘விக்ரம் 58’ டீம் போட்டிருக்கும் மாஸ்டர் பிளான் இதோ!
முகப்பு > சினிமா செய்திகள்By Anbarashi | Nov 06, 2019 04:55 PM
சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் மற்றும் ஏ.ஆர்.ரகுமான் வழங்கிய பாடல் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

‘கடாரம் கொண்டன்’ திரைப்படத்தை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிப்பில் உருவாகவிருக்கும் ‘விக்ரம் 58’ திரைப்படத்தை ‘டிமாண்டி காலனி’, ‘இமைக்கா நொடிகள்’ ஆகிய த்ரில்லர் திரைப்படங்களின் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார்.
7 ஸ்கிரீன் ஸ்டூடியோ மற்றும் வியாகாம் 18 ஸ்டூடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாாரிக்கும் இப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக KGF படத்தின் ஹீரோயின் ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.
மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இந்திய கிரிக்கெட் அணி வீரர் இர்ஃபான் பதான் நடித்து வருகிறார். முதன்முறையாக நடிப்பில் களமிறங்கியுள்ள கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், விக்ரம் 58 திரைப்படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் பணிகளை நிறைவு செய்தது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், 15 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற முதற்கட்ட ஷூட்டிங் பணிகளை முடித்த ‘விக்ரம் 58’ படக்குழு அடுத்தக்கட்ட ஷூட்டிங் பணிகளை வரும் நவ.11ம் தேதி கேரளாவில் உள்ள ஆலப்புழாவில் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவாகிய பாடல் கொடுக்கப்பட்டுள்ளது. ஆகையால் கேரளா ஷூட்டிங்கில் இந்த பாடல் காட்சிகள் படமாக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.