’பேட்ட-யால் தான் இந்த படம்…’ கார்த்திக் சுப்புராஜின் D40 Exclusive தகவல்கள்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 16, 2019 07:34 PM
’பேட்ட’ திரைப்படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் தனுஷின் 40வது திரைப்படத்தை இயக்கி வருகிறார். கேங்ஸ்டர் கதையம்சம் கொண்ட இந்த படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் தனுஷுக்கு நாயகியாக ஐஷ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். இந்த படத்தில் வேலைகள் ஒருபுறம் இருக்க கார்த்திக் சுப்புராஜ் ’அல்லி’ எனும் சுயாதீன படத்தையும் தயாரித்துள்ளார்.
S துர்கா மலையாளப்படத்தை இயக்கிய சனல் குமார் இந்த திரைப்படத்தை இயக்கி உள்ளார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் உருவாகி உள்ள இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.
’தனுஷ் 40’ படம் பற்றி பேசிய கார்த்திக்சுப்புராஜ், பேட்ட படத்துக்கு முன்பாகவே ’தனுஷ் 40’ படத்தின் கதை தாயாராகி விட்டதாகவும் அப்போது ரஜினி ’பேட்ட’ படத்துக்கு ஓகே சொன்னதால் இது தமதமானதாகவும் தெரிவித்தார்.
’தனுஷ் 40’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் ‘கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ எனும் இங்கிலாந்து நடிகர் நடித்துள்ளார். முன்னதாக இந்த பாத்திரத்தில் நடிக்க ஹாலிவுட் நடிப்பு ஜாம்பவான் ராபர்ட் டி நீரோவை (Robert De Niro) கேட்டிருந்ததாக கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்தார்.
’பேட்ட-யால் தான் இந்த படம்…’ கார்த்திக் சுப்புராஜின் D40 EXCLUSIVE தகவல்கள் வீடியோ