தனுஷ் - கார்த்திக் சுப்பராஜ் இணையும் D40 படத்தின் முக்கிய அப்டேட் சொன்ன தயாரிப்பாளர்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 11, 2019 04:46 PM
'அசுரன்' படத்துக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். தனுஷின் 40வது படமான இதனை ஒய்நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
![Producer Sashikanth shares Shooting Update of Dhanush and Karthik Subbaraj's D40 Producer Sashikanth shares Shooting Update of Dhanush and Karthik Subbaraj's D40](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/producer-sashikanth-shares-shooting-update-of-dhanush-and-karthik-subbarajs-d40-photos-pictures-stills.jpg)
இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிக்க, கலையரசன், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்து வருகிறார்.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளரான சசிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ''இந்தியாவில் D40 படத்தின் படப்பிடிப்பு தற்போது தொடங்கி 24 ஆம் தேதி வரை நடைபெறும். பின்னர் ஜனவரி மாதத்தின் நடுவே 3 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும். அதோடு இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவுபெறும்'' என்று தெரிவித்துள்ளார்.