www.garudabazaar.com

யோகிபாபு நடிக்கும் புதிய த்ரில்லர் படம் 'ஷூ' .. வெளியானது ஆடியோ மற்றும் டிரெய்லர்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

Netco Studios சார்பில் நியாஷ் & கார்த்திக் மற்றும் ATM Productions T மதுராஜ் நிறுவனங்கள் தயாரிப்பில் இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் யோகிபாபு நாயகனாக நடித்திருக்கும் திரில்லர் காமெடி திரைப்படம் “ஷீ”.

Director Kalyaan Yogi Babu Shoe audio trailer Launch

இப்படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, KPY பாலா, திலீபன் ஆகியோருடன்  மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர். இப்படத்திற்கு முன்னணி இசையமைப்பாளர் சாம் CS இசையமைத்துள்ளார். புதுமையான திரைக்கதையில் ஒரு திரில்லர் படமாக உருவாகியுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இவ்விழாவினில் திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொண்டனர்.

Director Kalyaan Yogi Babu Shoe audio trailer Launch

இப்படம் குறித்து நடிகை ஷஞ்சிதா ஷெட்டி மற்றும் கோமல் ஷர்மா கூறும்போது, படத்தின் தலைப்பு ஷூ என்று இருந்தாலும், இந்த படத்தின் கரு அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய ஒன்றாக இருக்கிறது. குழந்தை கடத்தலை மையமாக வைத்து உருவாக்கபட்ட இந்த கதை இந்த சமூகத்திற்கு மிக முக்கியமானது. பெண்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதும், மரியாதை கொடுப்பதும் மிக அவசியமான ஒன்று என்று தெரிவித்தனர். இதேபோல் க/பெ ரணசிங்கம் படத்தின் இயக்குனர் விருமாண்டி பேசும்போது, இயக்குனர் கல்யாண் சமூக பொறுப்புடன் இப்படத்தை உருவாக்கியுள்ளதாக கூறினார்.

Director Kalyaan Yogi Babu Shoe audio trailer Launch

இயக்குனர் பாக்யராஜ் கூறும்போது,  “புது தயாரிப்பாளர்கள் தமிழ் சினிமாவிற்கு வருவது, ஆரோக்கியமான விஷயம். இயக்குனர் கல்யாண் தயாரிப்பாளர்களுக்கான இயக்குனர். யோகிபாபுவிற்கு இப்போது அதிக வரவேற்பு இருக்கிறது. அவர் இருப்பதனாலே படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். முக்கியமான தொழில்நுட்ப கலைஞர்களை வைத்து இந்த படத்தை உருவாக்கியது இந்த படத்திற்கு மேலும் ஒரு பலம். அதனால் இந்த படமும் நன்றாக வந்திருக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துகள்.” என தெரிவித்தார்.

தொடர்புடைய இணைப்புகள்

Director Kalyaan Yogi Babu Shoe audio trailer Launch

People looking for online information on Kalyaan S, Shoe audio Launch, Shoe Trailer Launch, Yogi Babu will find this news story useful.