www.garudabazaar.com

"பென்சியுடன் மேலும் ஒருமுறை திருமணத்துக்கு தயார்.!" - இஸ்லாமிய முறையிலும் புகழ் திருமணம்.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடந்த 2016-ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான சிரிப்புடா நிகழ்ச்சியில் நகைச்சுவையாக பெர்ஃபார்மென்ஸ் பண்ணியதன் மூலம் பிரபலமான புகழ், தொடக்கத்தில் பெண் வேடமிட்டு பல கான்செப்ட்களில் நடித்து வந்தார்.  தொடர்ந்து விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக பங்குபெற்றார்.

after hindu Pugazh Bensi marriage in islam tradional

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், புகழ் தனக்கே உரிய கலகலப்பான நகைச்சுவை பேச்சால், அனைவருக்கும் பிடித்தமானவரானார்.  இதனைத் தொடர்ந்து அவருக்கு ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாக, பின்னர் திரைப்படங்களிலும் எண்ட்ரி கொடுத்தார். அதன்படி, குக் வித் கோமாளி அஷ்வினுடன் இணைந்து, ‘என்ன சொல்ல போகிறாய்’, சந்தானம் நடித்த ‘சபாபதி’, அஜீத் நடித்த ‘வலிமை’, சூர்யா நடித்த ‘எதற்கும் துணிந்தவன்’, அருண் விஜய்யின் ‘யானை’ ஆகிய திரைப்படங்களில் புகழ் நடித்தார்.

after hindu Pugazh Bensi marriage in islam tradional

தற்போது பல படங்களில் பிஸியாக நடித்து வரும் புகழ், ‘ஜூ கீப்பர்’ என்கிற படத்தில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். இந்நிலையில்தான் 5 வருடங்களாக, தான் காதலித்து வந்த பென்சி எனும் பெண்ணை புகழ் அண்மையில் திருமணம் செய்துகொண்டார். முன்னதாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் ஒரு எபிசோடில், பேசியிருந்த புகழ், இந்த வருடமே திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் , விரைவில் கல்யாணத்தைப் பற்றி தெரிவிப்பதாகவும் சொல்லி இருந்தார்.

after hindu Pugazh Bensi marriage in islam tradional

அவர் சொன்னபடி, அண்மையில் புகழ் மற்றும் பென்சியின் திருமணம் கோலகலமாக நடந்தது, இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக,  ரசிகர்களும், பிரபலங்களும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். இதனிடையே முன்னதாக இந்து முறையில் திருமணம் செய்துகொண்ட புகழ், தற்போது மனைவின் மார்க்கமான இஸ்லாமிய முறையிலும் திருமணம் செய்துகொண்டுள்ளார்.

after hindu Pugazh Bensi marriage in islam tradional

இதுகுறித்து தம்முடைய இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட நடிகர் புகழ், “என் தந்தை அன்பிற்கு ஒருமுறை.. என் தாய் அன்பிற்கு ஒருமுறை.. என் மனைவி குடும்பத்தார் அன்பிற்கு ஒருமுறை.. வேறு அன்பு உள்ளங்கள் ஆசைப்பட்டால், மேலும் ஒருமுறை தயார்.. இந்தியனாக இருக்கிறேன். எல்லா புகழும் இறைவனுக்கே!” என்று குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

after hindu Pugazh Bensi marriage in islam tradional

People looking for online information on Cook with comali, Pugazh Bensi marriage, Pugazh Bensi Wedding, Pugazh girlfriend Riya, Pugazh Partner Pugazh girlfriend, Pugazh Wedding, Who is Pugazh girlfriend will find this news story useful.