www.garudabazaar.com

தனுஷ் உடனான திருமண பிரிவுக்கு பின் பொது தளத்தில் முதல் முறையாக தனது பெயரை மாற்றிய ஐஸ்வர்யா!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை: திருமண பிரிவுக்கு பின் ஐஸ்வர்யா தனது பெயரை மாற்றியுள்ளார்.

Director Aishwarya Dhanush Changed her name into Aishwarya Rajinikanth

'காலா' அஞ்சலி பாட்டீலுக்கு பா.ரஞ்சித் கொடுத்த அடுத்த வாய்ப்பு! மேடையில் நெகிழ்ந்த நடிகை

நடிகர் தனுஷ் தனது மனைவியும் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யாவை பிரிய முடிவு செய்து பரஸ்பர அறிக்கையை வெளியிட்டனர். நடிகர் தனுஷ் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் 18 ஆம் தேதி, நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவைத் திருமணம் செய்துகொண்டார். இந்தத் தம்பதியினருக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். இந்த தம்பதியின் 18 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. இது தனுஷ் ரசிகர்கள் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழ் சினிமா வட்டாரத்திலும் இந்த முடிவு பரபரப்பை கிளப்பியது.

"18 வருடங்களாக நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக, நலம் விரும்புபவர்களாக ஒருவரையொருவர் இணைத்து... வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு,எனப் பயணம் செய்தோம்.. இன்று நம் பாதைகள் பிரியும் இடத்தில் நிற்கிறோம்... இருவரும் ஒரு ஜோடியாகப் பிரிந்து, தனிப்பட்டவர்களாக எங்களைப் புரிந்து கொள்ள நேரம் ஒதுக்க முடிவு செய்துள்ளோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனியுரிமையை எங்களுக்கு வழங்கவும்". என அறிக்கையில் இருவரும் கூறி இருந்தனர்.

Director Aishwarya Dhanush Changed her name into Aishwarya Rajinikanth

ஐஸ்வர்யா, நடிகர் தனுஷை வைத்து  '3' மற்றும் 'வை ராஜா வை' ஆகிய படங்களை இயக்கியவர். தற்போது லைகா நிறுவனத்துக்காக புதிய படத்தை இயக்க உள்ளார்.  இவர் இயக்கிய 'சினிமா வீரன்' என்ற ஆவண படமும், கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகியிருந்தது.

Director Aishwarya Dhanush Changed her name into Aishwarya Rajinikanth

இந்நிலையில், இயக்குனர் ஐஸ்வர்யா தனது குழுவினருடன் ஒரு பாடல் வீடியோ தயாரிப்புக்காக உரையாடும் புகைப்படங்களும், இணையத்தில் சமீபத்தில் வைரலாகி இருந்தது. அச்சமயத்தில், ஐஸ்வர்யாவிற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. பின் சில நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட ஐஸ்வர்யா மீண்டும் பாடல் வீடியோவை உருவாக்கும் வேலைகளில் களமிறங்கினார். காதலர் தினமான நேற்று, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இந்த புதிய பாடல் குறித்த ப்ரோமோ வீடியோவை ஐஸ்வர்யா பகிர்ந்துள்ளார்.

Director Aishwarya Dhanush Changed her name into Aishwarya Rajinikanth

அன்கித் திவாரி இந்த பாடலுக்கு இசையமைக்கிறார். பல மொழிகளில் தயாராகும் இந்த பாடலை, தெலுங்கில் சாகரும், மலையாளத்தில் ரஞ்சித் கோவிந்த்தும், தமிழில் அனிருத்தும் பாடுகின்றனர். இதன் முழு வீடியோ விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவில் ஐஸ்வர்யா தனது பெயரை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என மாற்றியுள்ளார்.

"இந்த படத்தை OTT-ல ரிலீஸ் செய்ய சொன்னே.. ஆனால் தயாரிப்பாளர் இப்படி செஞ்சுட்டாரு" - பா.ரஞ்சித்

மேலும் செய்திகள்

Director Aishwarya Dhanush Changed her name into Aishwarya Rajinikanth

People looking for online information on Aishwarya Rajinikanth, ஐஸ்வர்யா, தனுஷ், ரஜினிகாந்த், Director Aishwarya Dhanush will find this news story useful.