Reliable Software
www.garudabazaar.com

இந்த குக் வித் கோமாளி போட்டியாளர் நடிகர் தனுஷ் கூட படிச்சவரா.. இது நம்ம லிஸ்டுலேயே இல்லயே!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. போட்டியாளர்களுக்கும் சரி, கோமாளிகளுக்கும் சரி தனித்தனியே ரசிகர் பட்டாளம் இருக்கிறது என்றே சொல்லலாம். அதிலும் முக்கியமாக புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது. அதிலும் முக்கியமாக புகழுக்கு தனியே நிறைய ரசிகர்கள் இருக்கின்றனர்.

this cook with comali fame is dhanush classmate இவர் நடிகர் தனுஷ் கூட படிச்சவரா

இந்த சீசனை பொருத்தவரை ஒவ்வொரு போட்டியாளரும் ஒருவகையில் ஆச்சரியத்தை அளிக்கிறார்கள். ஷகிலா தொடங்கி இளம் நடிகரான அஸ்வின் வரை சமைத்து அசத்துகிறார்கள். அதிலும் திரைத்துறையில் பலரையும் ஆட்டுவித்த புகழ்பெற்ற நடன அமைப்பாளரான பாபா பாஸ்கர் இந்நிகழ்ச்சியில் செய்யும் ரகளை சமையல் அனைவரையும் வெகுவாக கவர்ந்துள்ளது என்றே சொல்லலாம். நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த போது கூட இதையே தான் வழிமொழிந்தார். அவருக்கு மனைவியும் ஒரு மூத்த மகனும், மகளும் உள்ளனர். குடும்பத்தின் மீது அதிக பாசம் உள்ள மனிதராக இருக்கும் பாபா பாஸ்கருக்கு கடவுள் பக்தியும் அதிகம். இந்நிலையில் பாபா பாஸ்கர் பற்றி பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம் தற்போது வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். அசுரன் படத்திற்காக சமீபத்தில் தேசிய விருது பெற்றவர். இந்நிலையில் நடிகர் தனுஷ் தான் தனக்கு பெரிய வாய்ப்பு அளித்தவர் என்று பல மேடைகளில் பாஸ்கர் நன்றியுடன் கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் தனுஷ் மற்றும் பாபா பாஸ்கர் இருவரும் எட்டாவது வகுப்பு வரை ஒன்றாக ஒரே பள்ளியில் படித்தவர்களாம். இந்த தகவல் பலருக்கும் தெரியாத நிலையில் இதை தனது பதிவில் மாஸ்டரே உறுதிப்படுத்தியுள்ளார்.

this cook with comali fame is dhanush classmate இவர் நடிகர் தனுஷ் கூட படிச்சவரா

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

this cook with comali fame is dhanush classmate இவர் நடிகர் தனுஷ் கூட படிச்சவரா

People looking for online information on Baba Bhaskar, Dhanush will find this news story useful.