பிகிலுக்கு பிறகு ஃபுட் பாலை மையப்படுத்தி கதிர் நடித்துள்ள 'ஜடா' பட டிரெய்லர் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Nov 15, 2019 06:32 PM
தளபதி விஜய்யின் 'பிகில்' படத்தில் ஃபுட் பால் வீரராக கதிர் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது. இதனையடுத்து 'ஜடா' எனும் படத்தில் கதிர் நடித்துள்ளார்.

இந்த ஜடா திரைப்படமும் ஃபுட் பால் விளையாட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ளது. இந்த படத்தை தி போயட் ஸ்டுடியோஸ் சார்பில் விக்னேஷ் ராஜகோபால் தயாரிக்க குமரன்.ஏ இயக்கியுள்ளார்.
மேலும் இந்த படத்துக்கு சாம் சிஎஸ் இசையமைக்க, ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவு செய்துள்ளார். கதிருக்கு ஜோடியாக இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் நடிக்க, யோகி பாபு இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் டிசம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.
பிகிலுக்கு பிறகு ஃபுட் பாலை மையப்படுத்தி கதிர் நடித்துள்ள 'ஜடா' பட டிரெய்லர் இதோ வீடியோ