இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ட்ரெய்லர் இதோ

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தினேஷ் நடித்து வரும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Dhinesh Irandam Ulaga Porin Kadaisi Gundu Trailer Out Now

இயக்குநராக அட்டகத்தி, மெட்ராஸ், காலா, கபாலி போன்ற தமிழ் சினிமாவின் கவனிக்கத்தக்க படங்களை கொடுத்தவர் பா.ரஞ்சித். இவர் தயாரிப்பாளராக அறிமுகமான படம் பரியேறும் பெருமாள்.

மாரி செல்வராஜ் இயக்கிய இந்த படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்றது. இந்த படத்தை கதிர், ஆனந்தி  நடிக்க, சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமத்திருந்தார்.

இதனையடுத்து பா.ரஞ்சித் தனது நீலம் புரொடக்ஷன் சார்பாக தயாரிக்கும் படம் இரண்டாம் உலகப் போரின் கடைசிக் குண்டு. இந்த படத்தை அதியன் ஆதிரை இயக்குகிறார். இந்த படத்தில் தினேஷ், ஆனந்தி, ரித்விகா, உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்..

கிஷோர் குமார் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்தில், கலை இயக்குனராக இராமலிங்கம், படத்தொகுப்பாளராக செல்வா ஆர்.கே ஆகியோர் பணியாற்றுகிறார்கள். பாடல்களை உமாதேவி, அறிவு, தனிக்கொடி, தங்கவேலு ஆகியோர் எழுதுகிகின்றனர். இந்நிலையில் இன்று இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. 

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிக்கும் ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ ட்ரெய்லர் இதோ வீடியோ