தல அஜித் படம் குறித்து கருத்து சொன்ன த்ரிஷா !

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தல அஜித் நடிப்பில் 'நேர்கொண்ட பார்வை' படம் கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் பேராதரவை பெற்றது. போனி கபூர் தயாரித்துள்ள இந்த படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

Trisha speaks about Thala Ajith's Nerkonda Paarvai

இந்நிலையில் குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப்(UNICEF)க்காக விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் நடிகை திரிஷா பங்கேற்றார். அப்போது தமிழ் சினிமா இயக்குநர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனென்றால் பெண்களை மையப்படுத்தி அதிக திரைப்படங்கள் வருகிறது. தற்போது பெண்களுக்கு எதிரான குற்றங்கள், குழந்தை திருமணங்கள், பிரவசத்தின் போது ஏற்படும் மரணம் போன்ற நிகழ்வுகள் கனிசமாக குறைந்திருக்கின்றன'' என்றார்

அப்போது பத்திரிக்கையாளர்கள் தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் பற்றிக் கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், உங்களுக்குலா தெரியும் நான் எவ்ளோ பெரிய அஜித் ஃபேன் என்பது. அஜித் சார் மாதிரியான சூப்பர் ஸ்டார் இந்த மாதிரியான ஒரு படம் பண்ணி எல்லோருடைய கண்ணையும் திறந்துட்டாரு. அந்த படம் நல்லா போய்ட்டு இருக்கு. இப்ப தான் நான் ஊருக்கு வந்தேன். என்றார்.

தல அஜித் படம் குறித்து கருத்து சொன்ன த்ரிஷா ! வீடியோ