Sandunes Others
RRR Others USA
www.garudabazaar.com

வடசென்னை விட வலிமை படத்துக்கு ரொம்ப பிரச்சனை இருந்துச்சு.. சுப்பராயன் பகிர்ந்த தகவல்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சென்னை : வடசென்னை, ஹீரோ, கோப்ரா,வலிமை போன்ற படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றிய திலிப் சுப்பராயன் தனது அனுபவங்களை நேர்காணல் மூலம் பகிர்ந்து கொண்டார்.

 

Dhilip Subbarayan open talk about vadachennai fight sequence

வடசென்னை

தமிழில் முன்னணி நடிகராக இருப்பவர் தான் தனுஷ், தற்போது தமிழில் மட்டுமல்லாமல் இந்தி, தெலுங்கு என்று அனைத்து மொழிகளிலும் பட்டைய கிளப்பி வருகின்றார். ஆரம்ப காலத்தில் சில படங்கள் கை கொடுக்கவில்லை என்றாலும், பல படங்கள் இவருக்கு நல்ல வாய்ப்புகளை கொடுத்தது. அந்த வகையில் வடசென்னை படம் இவரது நடிப்புக்கு தீனி போட்ட படமாக அமைந்தது. அதன்பிறகு அவருக்கு பல படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதுமட்டும் இல்லாமல் பல வித்தியாசமான கதாபாத்திரங்கள் கிடைத்தது தான் இவரது  மாபெரும் வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது.

Samantha-வின் Oo Solriya Mama பாடலுக்கு குத்தாட்டம்! பட்டையை கிளப்பும் பிரபல சீரியலின் எபிசோடு!

சண்டை காட்சிகள்

வடசென்னை படத்தில் பல காட்சிகள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அப்படத்தில் இடம்பெற்றுள்ள சண்டைக்காட்சிகள் பெருமளவு பேசப்பட்டது. நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 2018ஆம் ஆண்டு வடசென்னை படம் வெளிவந்தது.

Dhilip Subbarayan open talk about vadachennai fight sequence

இப்படத்தில் ஆண்ட்ரியா,அமீர், ஐஸ்வர்யா ராஜேஷ், சமுத்திரக்கனி, ராதாரவி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடித்திருந்தனர். இப்படத்தை வெற்றிமாறன் இயக்கினார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து சந்தோஷ் நாராயணன் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.

வெளிச்சம் இல்லாமல்

1980 மற்றும்  90களில் வட சென்னையில் நடந்த சில முக்கிய நிகழ்வை அடிப்படையாகக் கொண்டபடம் தான் இது. நேத்து 18 ஆம் ஆண்டின் டாப் திரைப்படங்களில் ஒன்றாக இருந்தது. பல ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூலிலும் வாரி குவித்தது. இப்படத்தின் சண்டை காட்சிகளும் நல்ல வரவேற்பை பெற்றது.  இப்படத்திற்கு ஸ்டண்ட் இயக்குனர் திலிப் சுப்பராயன். தற்போது அஜித் நடிப்பில் வெளிவர இருக்கும் வலிமை படத்திற்கும் இவர் தான் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றியுள்ளார்.

Dhilip Subbarayan open talk about vadachennai fight sequence

சமீபத்தில் அவர் கொடுத்த நேர்காணலில் அவர் பணியாற்றிய படங்களை பற்றிய தகவலை பகிர்ந்தார். வடசென்னை படத்தை பற்றி அவர் கூறுகையில், இப்படத்தின் இடைவேளைக்கு முன் சண்டைக்காட்சி இருக்கும் அதில் நாங்கள் வெளிச்சம் இல்லாமல் மிகவும் சிரமப்பட்டோம். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் அந்த இருட்டு காட்சியில் வெளிச்சம் கிடைக்க ஏதாவது ஒரு சின்ன ஓட்டை கிடைக்குமா என்று தேடிக் கொண்டிருந்தார். ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த காட்சி, அந்த சீன் தான் படத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. ஒவ்வொரு சண்டை காட்சியும் பெரிய அளவில் பேசப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

பாரதி கேட்ட அந்த கேள்வி.. ஆடிப்போன வெண்பா.. பாரதி கண்ணம்மாவில் புதிய திருப்பம்!

வடசென்னை விட வலிமை படத்துக்கு ரொம்ப பிரச்சனை இருந்துச்சு.. சுப்பராயன் பகிர்ந்த தகவல்! வீடியோ

Dhilip Subbarayan open talk about vadachennai fight sequence

People looking for online information on திலிப் சுப்பராயன், வடசென்னை, Dhilip Subbarayan, Fight sequence, Stunt Master, VADACHENNAI will find this news story useful.