Reliable Software
www.garudabazaar.com

ரவுடிகளை அடித்து நொறுக்கும் சரவணன், பாரதி... சண்டை காட்சி உருவானது எப்படி... மேக்கிங் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி என்றாலே சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளுக்கு தான் பிரசித்தம். பல நிகழ்ச்சிகளும் ரசிகர்களின் மனதை கவர்ந்து வருகிறது. அப்படி நடிகை ஆல்யா மானசா மற்றும் அவரது கணவர் சஞ்சீவ் இணைந்து நடித்த நாடகம் ராஜா ராணி. அந்த சீரியல் வெற்றி பெற்றதையடுத்து அதே பெயரில் இரண்டாம் பாகம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நடிகை ஆல்யா மானசா உடன் கலர்ஸ் சேனலில் திருமணம் சீரியல் மூலம் பிரபலமடைந்த சித்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆரம்பத்தில் மெதுவாக நகர்ந்தாலும் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது ராஜா ராணி 2. அதே போல் இதன் ஒளிபரப்பு நேரமும் ஒரு மணி நேரமாக அதிகரித்துள்ளது.

raja rani famous fight sequence making video ரவுடிகளை அடித்து நொறுக்கும் சரவணன்

இந்த சீரியல் ஹிந்தியில் ஒளிபரப்பாகி வெற்றி பெற்ற "என் கணவன் என் தோழன்" என்ற சீரியலின் அதிகாரப்பூர்வ ரீமேக் ஆகும். இதில் சரவணன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்து. நடிகர் சித்து கலர்ஸ் தமிழ் திருமணம் சீரியலில் நடிகை ஸ்ரேயா அஞ்சன் என்பவருடன் நடித்து வந்தார். அந்த சீரியல் திடீரென நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது ராஜா ராணி 2 சீரியலில்  வருகிறார்.  தற்போது ராஜா ராணி சீரியல் மற்றும் பாரதி கண்ணம்மா சீரியல் இணையும் மகாசங்கமம் நடைபெற்று வருகிறது. இந்த சீரியலின் ஒரு பகுதியாக ரவுடிகள் சந்தியாவை தாக்க வர அப்பொழுது கண்ணம்மா அவருக்கு உதவி செய்கிறார். பின்பு சரவணனும், பாரதியும் சேர்ந்து அவர்களை எப்படி காப்பாற்றுகிறார்கள் என்பது போல சமீபத்தில் ஒரு சண்டை காட்சி வைக்கப்பட்டது. மிகவும் பிரபலமான இந்த சண்டைக்காட்சி உருவாக்கப்பட்ட விதமான உருவாக்கப்பட்ட வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

ரவுடிகளை அடித்து நொறுக்கும் சரவணன், பாரதி... சண்டை காட்சி உருவானது எப்படி... மேக்கிங் வீடியோ! வீடியோ

Tags : Raja Rani

தொடர்புடைய இணைப்புகள்

raja rani famous fight sequence making video ரவுடிகளை அடித்து நொறுக்கும் சரவணன்

People looking for online information on Raja Rani will find this news story useful.