Sithara Music Concert(BICE) D Logo Top
www.garudabazaar.com

உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது குறித்து ட்வீட் செய்த தயாநிதி அழகிரி..!! Trending

முகப்பு > சினிமா செய்திகள்

By |

உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று பொறுப்பேற்றார்.

Dhayanidhi Alagiri Tweet about Udhayanidhi becomes Minister

ஆளுநர் ரவி அவருக்கு பதவிப் பிரமாணம் & ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவருக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.

சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இதேபோல் உதயநிதி ஸ்டாலின் சினிமாவிலும் நடித்தும் திரைப்படங்கள் தயாரித்தும் வருகிறார்.

அமைச்சரான உதயநிதிக்கு பல பிரபலங்களும் தலைவர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன், “வாழ்த்துகிறேன் தம்பி உதயநிதி ஸ்டாலின். அமைச்சர் ஆகியிருக்கிறீர்கள். அதைப் பதவியென எண்ணாமல், பொறுப்பென்று ஏற்பீர்கள் எனவும், மூன்று தலைமுறை அனுபவமும் உங்களுக்கு உதவும் எனவும் நம்புகிறேன். எதிர்பார்ப்புகள் உள்ளன. நிறைவேற்றுவதில் உங்கள் வெற்றி உள்ளது.” என தெரிவித்துள்ளார்.

இதேபோல் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த்,  தமது வாழ்த்துக் குறிப்பில் “தமிழக அமைச்சராகப் பதவியேற்றிருக்கும் அன்புத் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்.” என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

Dhayanidhi Alagiri Tweet about Udhayanidhi becomes Minister

இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானது குறித்து அவருடைய தம்பியும், முன்னாள் மத்திய அமைச்சரான அழகிரி மகனான சினிமா தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி ட்வீட் செய்துள்ளார். சூரியன் எமோஜியுடன் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பதவி ஏற்கும் புகைப்படத்தை தயாநிதி அழகிரி டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

தமிழ்படம், மங்காத்தா போன்ற படங்களின் தயாரிப்பாளர் தயாநிதி அழகிரி என்பது குறிப்பிடத்தக்கது

தொடர்புடைய இணைப்புகள்

Dhayanidhi Alagiri Tweet about Udhayanidhi becomes Minister

People looking for online information on Dhayanidhi alagiri, Udhayanidhi Stalin will find this news story useful.