www.garudabazaar.com

ரஞ்சிதமே ஸ்டைலில் ரசிகர்களுக்கு Flying கிஸ்.. தளபதி விஜய்யின் மாஸ் மொமண்ட்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கோலிவுட்டில் உள்ள முன்னணி ஹீரோக்களில் ஒருவர் விஜய்.

Vijay Ranjithame Song Style Flying Kiss to fans

தளபதி என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர். விஜய் தமிழகத்தில் மட்டுமல்லாது பரவலான ரசிகர்களை அண்டை மாநிலங்களிலும் கொண்டுள்ளார்.

நெல்சன் இயக்கிய 'பீஸ்ட்' படத்தில் விஜய் கடைசியாக  திரையில் காணப்பட்டார். பீஸ்ட் திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் நாள் ரிலீஸ் ஆனது.

Beast படத்திற்கு பிறகு 'வாரிசு' படத்தில் விஜய் நடிக்கிறார். இப்படத்தை வம்சி பைடிபல்லி இயக்குகிறார்.

Vijay Ranjithame Song Style Flying Kiss to fans

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கிறார். 

வாரிசு படத்தினை தொடர்ந்து நடிகர் விஜய்யின் அடுத்த 67வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படம் கேங்ஸ்டர் வகைமையில் உருவாக உள்ளது என லோகேஷ் கனகராஜ் அறிவித்துள்ளார்.

இந்த படத்தின் ஆரம்பக் கட்ட முன் தயாரிப்பு பணிகளில் லோகேஷ் கனகராஜ் ஈடுபட்டு வருகிறார். 

இந்நிலையில் நடிகர் விஜய், தனது ரசிகர்களை பனையூர் விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் நேற்று சந்தித்தார்.

இந்த சந்திப்பில் செங்கல்பட்டு, அரியலூர், கடலூர், திண்டுக்கல் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை விஜய் சந்தித்தார்.  அடையாள அட்டை வைத்துள்ள மக்கள் இயக்க நிர்வாகிகள் மட்டுமே இந்த சந்திப்புக்கு அனுமதிக்கப்பட்டனர்.

இந்த சந்திப்பில் நடிகர் விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்து ரஞ்சிதமே ஸ்டைலில் Flying Kiss கொடுத்தார். மேலும் சில ரசிகர்களிடம் சில வினாடிகள் பேசினார்.

விஜய் மக்கள் இயக்க பொதுச் செயலாளர் ஆனந்த் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.

Tags : Vijay, Varisu

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Vijay Ranjithame Song Style Flying Kiss to fans

People looking for online information on Varisu, Vijay will find this news story useful.