தமிழக சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசனின் அடுத்த திரைப்படத்தை தான் தயாரிக்கவிருந்த நிலையில் தற்போது அதில் இருந்து விலகியுள்ளதாக செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் பேரனும், தமிழகத்தின் தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் மகனும், சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின், தற்போது திமுக இளைஞரணி தலைவராகவும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார். இதேபோல் உதயநிதி ஸ்டாலின் சினிமாவிலும் நடித்தும் திரைப்படங்கள் தயாரித்தும் வந்தார்.
இந்நிலையில் உதயநிதி ஸ்டாலின் தமிழக அமைச்சராக இன்று (டிசம்பர் 14-ஆம் தேதி) திமுக கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள், உறுப்பினர்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆதரவோடு பொறுப்பேற்றார். தமிழக ஆளுநர் ரவி உதயநிதிக்கு பதவிப் பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார். மு.க. ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 35-வது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்றார். உதயநிதிக்கு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டதாகவும் மாமன்னன் கடைசி படம் என்று திட்டவட்டமாக தெரிவித்தார். முன்னதாக, “நடிப்பதை நிறுத்துகிறீர்களா?” என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, “அதுல ஏன் உங்களுக்கு அவ்வளவு கவலை” என கலகலப்பாக கேட்டார். தொடர்ந்து பேசியவர், “கமல்ஹாசன் சார் தயாரிக்கும் படத்தில் நடிப்பதில் இருந்தும் விலகியுள்ளேன். அமைச்சராகும் விஷயத்தை கமல்ஹாசன் சாரிடம் சொன்னதும் முதலில் அவர்தான் வாழ்த்தினார்.” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Kamalhaasan Tweet After Udhayanidhi Stalin Appoint As Minister
- TN Minister Udhayanidhi Stalin Stops Acting From Movies Official
- Kamal Haasan Wishes Super Star Rajinikanth Birthday
- Bigg Boss Season 6 Tamil Kamal Haasan Thug Life Moment
- Udhayanidhi Shares Sasikumar Bigg Boss Suruthi Nandhan First Look
- Maamannan Glimpse Video On Udhayanidhi Stalin Birthday
- Kamal Haasan Speech After Discharge DSP Audio Launch
- Kamal Haasan About Vijay Sethupathi DSP Movie Trailer Launch
- Kamal Haasan Attend DSP Trailer Launch With Vijay Sethupathi
- Kamal Haasan With Gulshan Grover In Indian 2 Shooting
- Kamal Haasan Health Update From Hospital Official 2022 Nov 24
- Bala Janathipathi Post About Udhayanidhi Stalin Ayya Vaikundar Temple Visit
தொடர்புடைய இணைப்புகள்
- 'வாய்ப்பு கொடுத்த CM.. அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின்..!' இனி அப்பா CM.. மகன் Minister
- "மறுபடி ஆரம்பிக்கலாமா" Kamal & Lokesh Next Project💥 Thalapathy 67-க்கு அப்புறம் நடக்குமா? Vikram 100
- 'அமைச்சர் பதவி குறித்த கேள்வி'.. வெட்கப்பட்டு சிரித்த உதயநிதி..! சூசகமாக கொடுத்த Reply | Udhayanidhi
- 45 நாளில் 1 லட்சம்.. பணம் கொட்டும் சாமந்தி சாகுபடி..! அசத்தும் இயற்கை விவசாயி | Samanthi Flower
- தள்ளுமா, மேல இடிச்சிடும்... Live Visit To New Super Singer Set | Makapa, Unnikrishnan, VijayTV
- "விஜயின் வாரிசுக்கு எதிரா RED GIANT பிரச்சனை பண்ணுறாங்களா..?" ராதா ரவி பரபரப்பு பேட்டி
- 'என் Whatsapp கால் ஒட்டுக்கேட்குறாங்க..?'தொடந்து பகீர் கிளப்பிய சவுக்கு சங்கர் பேட்டி
- 'என்னது தயாநிதி அன்புமணியா..?' அய்யோ பாவம் அவரே Confuse ஆகிட்டாரு..!
- 'இப்படி ஒரு உதயநிதி ரசிகரா..?' கருப்பு சிவப்பு கொடியில் வந்த 'கலகத் தலைவன்'..!
- 'பறவைக்கு கண்ணாடியும் அதிசயம் தான்..!' வியக்க வைத்த குருவியின் அழகான வீடியோ..🔥
- வாரிசால் வந்த விரிசல்..! ரெட் ஜெயன்ட் தான் காரணமா..? "நடந்தது இதான்?" K ராஜன் பகீர் பேட்டி
- "அத நான் எப்படி பேச முடியும்".. வாரிசு பற்றிய கேள்வியால் கடுப்பாகி கிளம்பிய உதயநிதி..! | Varisu