www.garudabazaar.com

போடு.. "100 ஆவது படத்துல விஜய் தான்".. ஜீவா கொடுத்த "சூப்பர் குட்" அப்டேட்..

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கடைசியாக, 'பீஸ்ட்' படத்தில் நடித்திருந்த நடிகர் விஜய், அடுத்ததாக இயக்குனர் வம்சி இயக்கத்தில் 'வாரிசு' திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

Actor Jiiva about super good films 100th film with vijay

இந்த திரைப்படத்தில் முதல் முறையாக நடிகர் விஜய்யுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார்.

மேலும், நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சரத்குமார், யோகிபாபு, ஷ்யாம், நடிகைகள் சங்கீதா, ஜெயசுதா, சம்யுக்தா உள்ளிட்ட ஏராளமானோர் நடித்து வருகின்றனர்.

வாரிசு திரைப்படத்தின் படப்பிடிப்பும் மிகவும் தீவிரமாக பல இடங்களில் நடைபெற்று வருகிறது. மேலும், வாரிசு படத்தின் மூலம், விஜய் படத்திற்கு முதல் முறையாக இசை அமைப்பாளர் தமன் இசையமைத்து வருகிறார். 2023 ஆம் ஆண்டு பொங்கல் விருந்தாக வாரிசு திரைப்படம் வெளியாகும் என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகி இருந்தது.

Actor Jiiva about super good films 100th film with vijay

இதனிடையே, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் 100 ஆவது படத்தில் நடிகர் விஜய் நடிப்பார் என நடிகர் ஜீவா தெரிவித்துள்ள தகவல், தற்போது இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில், நடிகர் ஜீவா கலந்து கொண்டார். அப்போது பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்திருந்தார். அந்த சமயத்தில் அவரிடம் சூப்பர் குட் ஃபிலிம்ஸின் 100 ஆவது படத்தில் விஜய் நடிப்பாரா என்ற கேள்வி முன் வைக்கப்பட்டது.

Actor Jiiva about super good films 100th film with vijay

இதற்கு பதிலளித்த நடிகர் ஜீவா, "நிச்சயமாக நடிப்பார். ஒரு வாரம் முன்பு தான் ஆர்.பி.சௌத்ரியுடன் விஜய் சந்தித்திருக்கிறார். 100-வது படத்தில் நடிக்கிறேன் என்பது போல் கூறியிருக்கிறார். நானும் அதில் நடிப்பதற்காக என் அப்பாவிடம் கேட்டிருக்கிறேன். சம்பளம் கொடுக்கவில்லை என்றாலும் நடிக்கத் தயாராக இருக்கிறேன். ஆக, சூப்பர் குட் ஃபிலிம்ஸ் இயக்கும் 100-வது படத்தில் விஜய் தான் நடிப்பார் என தெரிகிறது'' என்றார்.

வாரிசு படத்திற்கு பின், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய இணைப்புகள்

Actor Jiiva about super good films 100th film with vijay

People looking for online information on Jiiva, Super Good films, Vijay will find this news story useful.