தனுஷின் 'பட்டாஸ்' படத்துக்கு தமிழ்நாட்டில் இவ்ளோ வசூலா ? - அதிகாரப்பூர்வ தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'பட்டாஸ்' திரைப்படம் பொங்கலை முன்னிட்டு கடந்த ஜனவரி 15 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.

இந்த படத்தில் சினேகா மெஹ்ரீன் பெர்சடா, முனீஷ்காந்த், நவீன் சந்திரா, நாசர், KPY சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு விவேக் - மெர்வின் கூட்டணி இசையமைத்துள்ளனர்.
ஓம் பிரகாஷ் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்த படத்தின் மொத்த வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி இந்த படம் தமிழ்நாட்டில் ரூ. 25 கோடிக்கும் அதிகமான தொகையை வசூலித்துள்ளதாக அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags : Dhanush, Pattas, Durai senthilkumar