#EXCLUSIVE- தனுஷின் பவர்பாண்டி 2 - "ராஜ்கிரன் கவுண்டமணி காம்போ.." இயக்குநர் சொல்லும் சர்ப்ரைஸ்!
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் தனுஷ் பவர் பாண்டி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகவுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் தனுஷ். கமர்ஷியல் படங்கள் மட்டுமன்றி, ஆடுகளம், வடச்சென்னை, அசுரன் போன்ற படங்களில் நடித்து, தனது நடிப்புக்காக தனி ரசிகர்களை தனுஷ் வைத்துள்ளார். மேலும் பாலிவுட் மற்றும் ஃப்ரென்ச் திரைப்படங்களிலும் தனுஷ் நடித்துள்ளார். கடந்த 2017-ஆம் வருடம் தனுஷ் பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார். ராஜ் கிரன், ரேவதியை வைத்து உருவான இந்த படம் ரசிகர்களை கவர்ந்தது.
இந்நிலையில் பவர் பாண்டி படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷ் எடுக்க போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தனுஷுக்கு நெருக்கமாக இருக்கும் சுப்பிரமணிய சிவா கூறுகையில், 'பவர் பாண்டி படத்தின் திரைக்கதை உருவாக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டன. முதல் பாகத்தில் இருந்த ராஜ்கிரணுடன் சேர்ந்து கவுண்டமணியை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளோம், தனுஷ் நடித்து முடிக்க வேண்டிய படங்கள் நிறைய இருப்பதால், இது குறித்த அறிவிப்பு அதற்கு பின்பு வெளியாகும்' என அவர் தெரிவித்துள்ளார்.