அக்சய் குமார், வித்யா பாலன், டாப்ஸி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் 'மிஷன் மங்கள்'. இந்த படத்தின் மூலம் ஜெகன் சக்தி இயக்குநராக அறிமுகமாகியிருந்தார். இந்நிலையில் இவர் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இயக்குநர் ஜெகன் சக்தி தனது நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது திடீரென நினைவிழந்துள்ளார். இதனையடுத்து அவர் மும்பையில் உள்ள மருத்துவமனைக்கு அவசரகதியில் அழைத்து செல்லப்பட்டுள்ளார். தற்போது அவர் உடல் நலம் தேறிவருவதாக கூறுகிறது.
'மிஷன் மங்கள்' படத்தை இயக்குவதற்கு முன் இயக்குநர் ஜெகன், பிரபல இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஹிந்தியில் இயக்கிய, 'கஜினி', 'ஹாலிடே', 'அகிரா' போன்ற படங்களில் உதவி இயக்குநராக பணிபரிந்தது குறிப்பிடத்தக்கது.
Tags : Mission Mangal, Jagan Shakti