Reliable Software
www.garudabazaar.com

Video: "படத்துல தனுஷ் அழுற சீன் வந்தா பாக்க வேணாம்னு அவரே சொல்லிடுவார்!".. பெற்றோர் உருக்கம்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய அரசின் 67வது தேசிய விருது அங்கீகாரம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவான அசுரன் படத்துக்கு சிறந்த மாநில மொழித் திரைப்படமாகவும், அதில் நடித்த தனுஷை சிறந்த நடிகராகவும் தேர்வு செய்து அறிவித்து தேசிய விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.  இதுபற்றி தனுஷின் பெற்றோர் பகிர்ந்துள்ள பிரத்தியேக நேர்காணல் Behindwoods-ல் வெளியாகியுள்ளது.

Dhanush Parents hearfelt interview Ausran National Award

இதில் பேசிய இயக்குநரும் தனுஷின் தந்தையுமான கஸ்தூரி ராஜா,  “முதலில் படத்துக்கு தான் விருது கொடுத்திருப்பதாக நினைத்தேன். ஆனால் சினிமா கலைஞர்களுக்கும் பொதுமக்களுக்குமே தனுஷ்க்கு விருது வரும் என எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் படத்துக்கு மட்டும்தான் விருது என்றதும் ஏமாற்றம் உண்டானது. பின்னர் தான் நடிகருக்கான விருதினை அறிவித்தார்கள். எனக்கு குப்பென வேர்திடுச்சு. என் மகள் கார்த்திகா தான் முதலில் கத்திவிட்டார். பின்னர் தனுஷ்க்கு போன் செய்தோம் அவருக்கு வெளிநாட்டில் இரவு நேரம் என்பதால் காலையில் போன் செய்தார். அவரது அம்மா சமையலை ஷூட்டிங்கில் இருந்தாலும் கூட எடுத்து வைக்க சொல்லி விரும்பி சாப்பிடுவார். ஒரு காலத்தில் அம்மாவின் லாக்கருக்கு சாவியை கண்டுபிடித்து கொண்டுவந்தார். தனுஷ் எனும் அந்த குழந்தையை மோல்டு செய்து கொண்டுவந்தவர் செல்வாதான்.” என கூறியுள்ளார்.

இதேபோல் தனுஷின் அம்மா கூறும்போது, “பாத்ததுமே நானும் சாதிச்சுட்டடா கண்ணா என கத்திவிட்டேன்.. உடனே கட்டிப்புடிச்சு முத்தம் கொடுக்கணும்னு நினைச்சேன். தனுஷ் முட்டைக் குழம்பு விரும்பி சாப்பிடுவார். மரியான் படக்காட்சியில் தனுஷ் அழும் காட்சியில் எல்லாம் என்னால் உட்கார முடியாது. தனுஷே சொல்லிடுவார், அவர் அழும் காட்சிகளை அம்மா பார்க்க வேண்டாம் என சொல்லிடுவார்” என குறிப்பிட்டுள்ளார். இவர்கள் பேசிய முழு காணொளியை இணைப்பில் காணலாம்.

VIDEO: "படத்துல தனுஷ் அழுற சீன் வந்தா பாக்க வேணாம்னு அவரே சொல்லிடுவார்!".. பெற்றோர் உருக்கம்! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Dhanush Parents hearfelt interview Ausran National Award

People looking for online information on Asuran, Asuran Tamil, Dhanush, NationalAwards2019, NationalFilmAwards2019 will find this news story useful.