Vetrimaaran : "படம் தப்பாகிவிட கூடாதுனு".. ‘அசுரன்’ எடுக்கும் முன்பு வெற்றிமாறன் செய்த விஷயம்.!!
முகப்பு > சினிமா செய்திகள்தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். ‘அசுரன்’, 'பாவக்கதைகள்' (ஆந்தாலஜி) படங்களைத் தொடர்ந்து நடிகர் சூரியுடன் இணைந்து பணியாற்றும் “விடுதலை” படத்தை இயக்கி வருகிறார்.
லாக்கப் நாவலை விசாரணை எனும் திரைப்படமாகவும், வெக்கை நாவலை அசுரன் எனும் திரைப்படமாகவும் இயக்கிய இவர், எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய குறு நாவலான வாடிவாசலுக்கு திரைக்கதை அமைத்து சூர்யா நடிப்பிலான வாடிவாசல் திரைப்படத்தை இயக்குகிறார். முதல் முறையாக வெற்றிமாறன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில், கலைப்புலி தாணு தயாரிக்கும் "வாடிவாசல்" படத்தின் உருவாக்க முன்னோட்டம் சில நாட்களுக்கு முன் வெளியாகி, ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.
வாடிவாசல் படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் நடைபெற்றது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முதலைக்குளம் அருகே உள்ள கீழப்பட்டி கிராம மாசி சிவன் ராத்திரி களரி திருவிழா செட் அமைத்து ஜல்லிக்கட்டு காட்சிகள் படமாக்கப்பட்டன. இதேபோல் விடுதலை படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தருவாயில் உள்ளன.
இந்நிலையில்தான், இயக்குனர் வெற்றிமாறன் சென்னையில் நடந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனின் 60வது பிறந்தநாள் மணிவிழா நிகழ்வில் கலந்து கொண்டார். சமத்துவம், மக்கள் எழுச்சி, ஒன்று சேர் என்ற தலைப்பில் குறும்பட மற்றும் ஆவணப்பட கலை திருவிழா, இந்த மணிவிழாவின் ஒரு பகுதியாக இடம்பெற்றது.
இந்நிலையில் இந்த விழாவில் பேசிய இயக்குநர் வெற்றிமாறன், “அசுரன் படம் எடுக்கும் முன்பு பொலிடிகலாக தவறாகிவிடக் கூடாது என்பதற்காக, ஒரு முறை திருமாவளவனிடம் அப்பாய்ன்மெண்ட் பெற்று அவரை சந்தித்தேன். இந்த மாதிரி ஒரு பிரச்சனையை அணுகும்போது என்ன சார் முன்னுரிமையாக இருக்க வேண்டும்? என்று அவரிடம் கேட்டேன்.
அதற்கு அவரோ, தனிமனிதரால் சமூகத்துக்கு ஒரு தீர்வு வருதுனு படம் பண்ணாதீங்க .. தொடர்ந்து இந்த தவறை சினிமாவில் பலரும் செய்கிறீர்கள். ஒரு அமைப்பாய் திரளுங்க.. ஒரு மூவ்மெண்ட்டாக அது திரைக்குள்ளும் வரவேண்டும் என்றார். இன்னும் சில பாய்ண்ட்ஸை முன்வைத்தார். படம் பார்த்தும் அதே விமர்சனங்களை முன்வைத்தார். சில விஷயங்கள் தவிர்க்க முடியாமல் சினிமாவில் இடம்பெற்றுவிட்டது.” என்று குறிப்பிட்டார்.
அசுரன் திரைப்படம், 67வது தேசிய திரைப்பட விருதுகள் விழாவில் 2019ஆம் ஆண்டுக்கான சிறந்த தேசிய திரைப்பட விருதை வென்றது. இப்படத்தில் சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷ்க்கு வழங்கப்பட்டது.
மேலும் செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- Vetrimaaran Speech About RajaRaja Chozhan And Thiruvalluvar
- Selvaraghavan About Dhanush Script Works Exclusive
- Dhanush Naane Varuven Movie First Day Box Office Collection Official
- Dhanush Naane Varuven Movie Genre Is Psycho Thriller Official
- Dhanush Naane Varuven Movie First Day Expected Box Office Collection
- Comedy Actor Bonda Mani Thanks Dhanush Over Help
- Dhanush Nane Varuven Second Single Song Released
- Dhanush Naane Varuven Movie Censored UA CBFC
- Dhanush Captain Miller Movie Poojai At AVM Studio
- Dhanush Thiruchitrambalam Movie OTT Release Sun NXT
- Dhanush Priyanka Mohan Captain Miller Movie Cast Update
- Nivedhithaa Sathish Joined In Dhanush Captain Miller Movie
தொடர்புடைய இணைப்புகள்
- இது Thara Local Money Heist🔥 வெளுத்து வாங்கிய Pranika 😎 அசந்து போன Judges🤩
- നടൻ ധനുഷിന് ബിയറഭിഷേകം നടത്തി ആരാധകർ . Flex-ൽ ഒഴുകിയത് ലിറ്റർക്കണക്കിന് BEER !!
- DHANUSH🔥சார் கூட நடிக்கும் போது வேறோ யார் கூடவோ நடிக்குற மாதிரி இருக்கும்.. INDHUJA On NAANE VARUVEN
- DHANUSH😱 ஒரு Dog மாதிரி நடிக்கணும்னா Dog மாதிரி கூட அவரு நடிச்சுக் காட்டுவாரு... INDHUJA Opens Up
- SELVARAGHAVAN🔥 Trailer பாத்துட்டு என்ன சார் இவ்ளோ பயங்கரமாக இருக்கீங்கன்னு சொன்னேன் INDHUJA Opens Up
- INDHUJA❤️ Cinema பத்தி ஒன்னும் தெரியாது, ஆனா Heroine ஆகணும்னு தான் வந்தேன்...
- DHANUSH & SELVARAGHAVAN🔥 "எங்க கூட சேர்ந்து படம் பண்ண Ready-யா?" INDHUJA About NAANE VARUVEN
- Oru Naalil Song From Pudhupettai ரொம்ப ரொம்ப பிடிக்கும், வாழ்க்கைனா இதுதானு சொல்லும்❤️INDHUJA Speaks
- Dhanush Family Real Story-யா இது?.. Ponniyin Selvan-கூட Clash நினைக்கும் போது..! - Indhuja Interview
- വൈറൽ സ്റ്റെപ്പുകൾക്ക് പിന്നിലെ കാഴ്ചകൾ, 'പറക്കെ പറക്കെ തുടിക്കുതേ
- വൈറൽ സ്റ്റെപ്പുകൾക്ക് പിന്നിലെ കാഴ്ചകൾ, 'പറക്കെ പറക്കെ തുടിക്കുതേ' - BTS
- Dhanush Vs Nithya Menen 😍 போட்டி போட்டு Dance 💃🏼 Megam Karukadha Song Making❤️ Thiruchitrambalam