கர்ணன் படத்தில் தளபதி ரெஃபரன்ஸ்! ஷூட்டிங் குறித்து தனுஷ் சொல்லும் தகவலில் உள்ள சீக்ரட்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடித்து வரும் கர்ணன் படம் பற்றிய புதிய தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.

கர்ணன் படம் குறித்து தனுஷ் தகவல் | dhanush mari selvaraj's karnan shooting details

தனுஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கர்ணன். இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்குகிறார். இத்திரைப்படத்தில் ரஜிஷா விஜயன், கௌரி கிஷன், லால், யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடந்து வந்தது.

இந்நிலையில் கர்ணன் படத்தின் ஷூட்டிங் குறித்து தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில், 'கர்ணன் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நிறைவடைந்துவிட்டது. படத்தின் 90 சதவீத ஷூட்டிங் முடிந்துவிட்டது' என தெரிவித்துள்ளார். மேலும் இத்துடன் குதிரையோடு அவர் இருக்கும் போட்டோவையும் பதிவிட்டுள்ளார். அதில் தனுஷ் அனிந்திருக்கும் டீ சர்டில் ரஜினியின் தளபதி படம் ப்ரின்ட் செய்யப்பட்டிருக்கிறது.

Entertainment sub editor