www.garudabazaar.com

தனுஷ் வரிகளில் வாத்தி படத்தின் முதல் சிங்கிள் .. எப்போ.? Official அப்டேட்.. Vaathi

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் தனுஷ் நடிப்பில் தமிழில் திருச்சிற்றம்பலம், நானே வருவேன், தி கிரே மேன் உள்ளிட்ட திரைப்படங்கள் முன்னதாக வெளியாகியிருந்தன.

dhanush lyrics vaathi first single update தனுஷ் வாத்தி

இவற்றை அடுத்து, தெலுங்கில் 'வாத்தி' படத்தில் நடிகர் தனுஷ் நடித்து வருகிறார். பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கும் இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வருகிறது. 

இந்த படத்திற்கு "வாத்தி" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. தெலுங்கில் சார் (Sir) என்றும் வைக்கப்பட்டுள்ள்ளது.  இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சுன் ஃபோர் சினிமாஸ் சார்பில், நாக வம்சி - சாய் சௌஜன்யா தயாரிக்கின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு  முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா மேனன் நடிக்கிறார். தேசிய விருது வென்ற எடிட்டர் நவீன் நூலி எடிட்டிங் செய்கிறார். இந்த படத்திற்கு GV பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.  தினேஷ் கிருஷ்ணன் இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள், வரும் நவம்பர் 10-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில், தனுஷ் எழுதியுள்ள இந்த பாடலை ஸ்வேதா மோகன் பாடுகிறார்.

தொடர்புடைய இணைப்புகள்

dhanush lyrics vaathi first single update தனுஷ் வாத்தி

People looking for online information on Dhanush, Samyuktha Menon, Vaathi, VaathiFirstSingle will find this news story useful.