அப்படிபோடு..!! - தனுஷின் ஜகமே தந்திரம்.. சரவெடி தகவல் கொடுத்த படக்குழு. - சம்பவம் இருக்கு.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தனுஷ் நடிக்கும் ஜகமே தந்திரம் திரைப்படம் குறித்து முக்கியமான அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. 

தனுஷின் ஜகமே தந்திரம் செம அப்டேட் இது | dhanush karthik subbaraj's jagame thanthiram first single rakita rakita releases on july 28

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம். இத்திரைப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். இதில் ஐஷ்வர்யா லக்‌ஷ்மி, கலையரசன்,  மலையாள நடிகர் ஜொஜு ஜார்ஜ், ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மே 1 வெளியாவதாக இருந்த ஜகமே தந்திரம், கொரோனா வைரஸ் பிரச்சனைகள் காரணமாக தள்ளிபோனது. 

இந்நிலையில் படத்தில் இருந்து ஒரு முக்கியமான அப்டேட்டை படக்குழு அறிவித்துள்ளது. வரும் ஜுலை 28 அன்று, ஜகமே தந்திரம் படத்தின் முதல் சிங்கிள் பாடலான, 'ரக்கிட ரக்கிட ரக்கிட' வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 28-ஆம் தேதி தனுஷ், தனது பிறந்தநாளை கொண்டாடுவதால், அன்று பாடலை வெளியிட முடிவு செய்துள்ளதாம் படக்குழு. இந்த அறிவிப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருப்பதுடன், 28-ஆம் தேதி தரமான சம்பவம் இருக்கு என ட்விட்டரில் ட்ரெண்ட் அடித்து வருகின்றனர். 

 

தனுஷின் ஜகமே தந்திரம் செம அப்டேட் இது | dhanush karthik subbaraj's jagame thanthiram first single rakita rakita releases on july 28

People looking for online information on Dhanush, First Single, Jagame Thanthiram, Karthik Subbaraj, Rakita Rakita Rakita will find this news story useful.