தனுஷின் பிறந்தநாள் மாத ஸ்பெஷல் -'ஜகமே தந்திரம்' படத்தில் செம சர்ப்ரைஸ் தகவல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்துள்ள படம் 'ஜகமே தந்திரம்'. இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பாக சஷிகாந்த் தயாரித்துள்ளார். இந்த படம் குறித்து தயாரிப்பு நிறுவனம் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளது.

Karthik Subbaraj and Dhanush's Jagame Thanthiram special announcement | தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் ஸ்பெஷல் தகவல்

அதில் நாளை (01/07/2020) காலை 9 மணிக்கு இந்த படத்தில் முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜூலை 28 ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால் அதனை முன்னிட்டு ஏதாவது அறிவிப்பாக இருக்கலாம் என்ற எதிர்பார்ப்பு தனுஷ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

'ஜகமே தந்திரம்' படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ஐஸ்வர்யா லெக்ஷ்மி நடிக்க, கலையரசன், ஜோஜூ ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்துக்கு இசையமைத்துள்ளார்.

 

மேலும் செய்திகள்

Karthik Subbaraj and Dhanush's Jagame Thanthiram special announcement | தனுஷ் மற்றும் கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் ஸ்பெஷல் தகவல்

People looking for online information on Dhanush, Jagame Thanthiram, Karthik Subbaraj will find this news story useful.