விக்ரமின் கோப்ரா படப் பாடலுக்கு அடிக்ட் ஆக ரெடியா? இதோ தும்பி துள்ளல் பாடல்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்திய நடிகர்களுள் பலவிதமான கெட்டப்புக்களில் தோன்றிய வெகு சில நடிகர்களுள் ஒருவர் என்ற பெருமை விக்ரமுக்கு உண்டு. அவரது திரைப் பயணத்தில் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் நடித்துள்ள கோப்ரா படம் நிச்சயமாக அதில் இன்னொரு மறக்க முடியாத படமாக இருக்கும். இந்தப் படத்துக்காக அவர் 7 வெவ்வேறு கெட்அப்களில் தோன்றி ரசிகர்களை மகிழ்விக்க உள்ளார்.

vikrams cobra first singles thumbi thullal released today

தற்போது கோப்ரா படத்திலிருந்து தும்பி துள்ளல் என்ற பாடலின் முதல் சிங்கிள் வெளியிடப்பட்டுள்ளது. ஆம், ஏ.ஆர்.ரஹ்மான், நகுல் அபயங்கர், ஸ்ரேயா கோஷல் ஆகியோரின் குரல்களில், மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் மிகச் சிறந்த காதல் பாடல்களின் கலவை இது.

தும்பித் துள்ளல் பாடலில் வலுவான கிளாஸிக்கல் டச் இருப்பதைப் பாடலை கேட்கும் போது கவனிக்கலாம். இப்பாடல் மெல்லிசையாகவும் அதே சமயத்தில் துள்ளல் இசையாகவும் அமைந்துள்ளது சிறப்பு.

இப்படத்தில் ‘கே.ஜி.எஃப்’ புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி மற்றும் மிருணாலினி ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் ஒளிப்பதிவு - ஹரிஷ்குமார்.

இயக்குனர் அஜய் ஞானமுத்து கோப்ராவை 90 நாட்களில் ஷூட் செய்து முடித்தார். படப்பிடிப்பில் கால் சதவீதத்திற்கும் மேலாக இன்னும் முடிக்கப்படவில்லை என்று படக்குழுவினர் சமீபத்தில் தெரிவித்துள்ளனர். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ பேனரில் லலித் குமாருடன் இணைந்து இப்படத்தை வயாகாம் ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பில் விக்ரமின் கோப்ரா படப் பாடல் தும்பி துள்ளலை கேட்டு மகிழுங்கள்

vikrams cobra first singles thumbi thullal released today

People looking for online information on Cobra, Thumbi Thullal, Vikram will find this news story useful.