’செம ஸ்பீட்…’ D40 படம் குறித்து தனுஷ் செமையான அப்டேட்
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 29, 2019 10:40 PM
ரஜினியின் ‘பேட்ட’ படம் இயக்கிய கார்த்திக் சுப்புராஜ் தனுஷை வைத்து எடுக்கும் அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு லண்டனில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

டி40 என்று தற்காலிகமாக குறிப்பிடப்படும் அப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ஐஷ்வர்யா லக்ஷ்மி நடிக்கிறார். முக்கியமான வேடத்தில் ’கேம் ஆஃப் த்ரோன்ஸ்’ சீரிஸில் நடித்த ஜேம்ஸ் காஸ்மோ நடிக்கிறார். ஒரு கேங்ஸ்டர் படமாக இது உருவாகியுள்ளது.
ஒய் நாட் ஸ்டுடியோஸ் சார்பில் சஷிகாந்த் தயாரிக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் (29.12.2019) முடிவடைந்ததாக தனுஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தான் பணியாற்றியதில் மிக வேகமாக முடிவடைந்த படம் இது என்று குறிப்பிட்டுள்ள தனுஷ், கார்த்திக் சுப்புராஜின் திறமையை வெகுவாக பாராட்டினார். விரைவில் இப்படத்தின் பின்னணி வேலைகள் தொடங்க உள்ளது.