www.garudabazaar.com

வாத்தி, கேப்டன் மில்லரை தொடர்ந்து.. தனுஷ் நடிக்கும் புதிய படம்.. வெளியான அதிரடி அப்டேட்!!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பிரபல தெலுங்கு இயக்குனருடன் நடிகர் தனுஷ் இணையும் புதிய படம் குறித்த அப்டேட் ஒன்று பிரத்யேகமாக கிடைத்துள்ளது.

dhanush new movie with Sekar Kammula update sources

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் தனுஷ். தனது திறம்பட நடிப்பால் அடுத்தடுத்து ஏராளமான ஹிட் படங்களை தமிழில் கொடுத்த தனுஷ், பாலிவுட், ஹாலிவுட் என அடுத்தடுத்தும் கால் பதித்திருந்தார்.

அதே போல, நடிகர் என்பதை தாண்டி இயக்குனர், பாடகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர் என பன்முக திறமையும் உள்ளவர் தனுஷ்.

தனுஷ் நடிப்பில் இந்த ஆண்டு, மாறன், தி க்ரே மேன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் உள்ளிட்ட படங்கள் ரிலீஸ் ஆகி இருந்தது. இதற்கு அடுத்தபடியாக, வாத்தி, கேப்டன் மில்லர் உள்ளிட்ட திரைப்படங்களிலும் நடிகர் தனுஷ் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில், இதற்கடுத்து தனுஷ் நடிக்க உள்ள திரைப்படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பிரத்யேக தகவல் ஒன்று கிடைத்துள்ளது.

dhanush new movie with Sekar Kammula update sources

தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்க உள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்தாண்டு ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. மேலும் இந்த படத்தை ஶ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இவர்கள் தான் சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளி விருந்தாக வெளியாகி இருந்த பிரின்ஸ் திரைப்படத்தையும் தயாரித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தனுஷ் மற்றும் சேகர் கம்முலா ஆகியோர் இணைய உள்ள புதிய திரைப்படம் குறித்து நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து பிரத்யேக தகவல் ஒன்று தற்போது கிடைத்துள்ளது. அதன்படி, சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் பூஜை, ஹைதராபாத்தில் வைத்து நாளை நடைபெற உள்ளது என்றும் கிடைத்த தகவல் தெரிவிக்கின்றது.

dhanush new movie with Sekar Kammula update sources

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் 'வாத்தி' திரைப்படம், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17 ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

dhanush new movie with Sekar Kammula update sources

People looking for online information on Captain Miller, Dhanush, Sekhar Kammula, Vaathi will find this news story useful.