தனுஷை பாலிவுட்டுக்கு தூக்கிப் போகும் ’பக்ஷிராஜன்’ - மீண்டும் முன்னணி இயக்குனர் காம்போ!
முகப்பு > சினிமா செய்திகள்’பட்டாஸ்’ படத்தை தொடர்ந்து, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்த ’டி40’ திரைப்படத்தின் ஷூட் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தனுஷ் ‘பரியேரும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு திருநெல்வேலியில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து இவர் ’யாரடி நீ மோகினி’, ’குட்டி’ படத்தை இயக்கிய மித்ரன் ஜவகரோடு இணைவதாக கூறப்பட்டது.
தற்போது தனுஷ் மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த படத்தில் இவருடன் அக்ஷைகுமாரும், சாரா அலிகானும் இணைந்து நடிக்கின்றனர். இந்த படத்துக்கு அத்ரங்கி ரே என்று பெயர் சூட்டியுள்ளனர். இப்படத்தை ’ராஜ்சனா’ படம் மூலம் தனுஷை பாலிவுட்டுக்கு அறிமுகம் செய்த ஆனந்த் எல் ராய் இயக்குகிறார். தனுஷ் ’ராஞ்சனா’ தவிர இந்தியில் பால்கி இயக்கிய ’ஷமிதாம்’ படத்திலும் அமிதாப் பச்சனோடு இணைந்து நடித்தது குறிப்பிடத்தக்கது.