டியூமரால் பாதிக்கப்பட்ட நடிகை சனம் ஷெட்டி - சர்ஜரிக்கு முன்பு உருக்கமான பதிவு
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Sep 30, 2019 12:44 PM
'அம்புலி', 'கதம் கதம்', 'சவாரி' உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்து ரசிகர்களுக்கு பரீட்சையமானவர் சனம் ஷெட்டி. இவர் தற்போது தமிழ் பிக்பாஸ் சீசன் 3யின் பிரபல போட்டியாளரான தர்ஷனின் நண்பராக அறியப்படுகிறார்.

தர்ஷனுக்கு ஆதரவான கருத்துக்களை தொடர்ச்சியாக அவர் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்து வந்தார். மேலும் தர்ஷன் எவிக்ட் செய்யப்பட்டது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ''இது வருத்தமான நிகழ்வு. பிக்பாஸ் இது அழகில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் சனம் ஷெட்டி தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மருத்துவமனையில் படுத்திருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், ''டியூமர் பற்றி சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது. ஆனால் அதனை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
தற்போது அதனால் சர்ஜரி செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டேன். நான் செய்யும் அறிவுரை என்னவென்றால் உங்கள் ஆரோக்கியம் மற்றும் உடல்நிலை சம்பந்தபட்ட விஷயங்களை அலட்சியப்படுத்தாதீர்கள். எனக்காக கடவுளிடம் வேண்டிக்கொள்ளுங்கள் நண்பர்களே என்று பதிவிட்டுள்ளார்.