www.garudabazaar.com
iTechUS

அப்படியே அச்சு அசலா இருக்கு.. வெப் சீரிஸில் விஜய் சேதுபதிக்கு தமிழ் டப்பிங் பேசிய TSK..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சேதுபதி.

Mimicry Artist TSK dubbed for Vijay Sethupathi in Farzi Web Series

Also Read | பிக் பாஸ் வீட்டில்.. விக்ரமன்-ஐ தொடர்ந்து.. "தமிழ்நாடு" என்ற வார்த்தையை சொன்ன அசிம்!!

சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் விக்ரம் , காத்துவாக்குல ரெண்டு காதல், மாமனிதன், DSP ஆகிய படங்கள் வெளியானது. 

விஜய் சேதுபதி நடித்து இடம் பொருள் ஏவல், யாதும் ஊரே யாவரும் கேளீர்,  விடுதலை, மும்பைக்கர், பிசாசு2, ஜவான் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.

மேலும் ஃபேமிலி மேன் வெப் சீரிஸ் மூலம் புகழ் பெற்ற இயக்குனர்களான ராஜ் & டிகே இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் Farzi, அமேசான் பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி முதல் இந்த வெப் சீரிஸ் ஒளிபரப்பாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Mimicry Artist TSK dubbed for Vijay Sethupathi in Farzi Web Series

இயக்குனர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கிய இந்த, க்ரைம் த்ரில்லர் தொடரில் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதியின் டிஜிட்டல் அறிமுகமாக அமைந்துள்ளது. மேலும் இந்தத் தொடரில் கே. கே. மேனன், ராஷி கண்ணா, அமோல் பலேகர், ரெஜினா காசண்ட்ரா மற்றும் புவன் அரோரா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Mimicry Artist TSK dubbed for Vijay Sethupathi in Farzi Web Series

இந்த தொடர், உணர்ச்சிகரமான க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது.

D2R ஃபிலிம்ஸ் தயாரிப்பில் ராஜ் & டிகே இயக்கத்தில் உருவான 'ஃபார்ஸி' வலைதளத் தொடரை சீதா ஆர். மேனன் மற்றும் சுமன் குமார் ஆகிய இருவரும், ராஜ் & டிகே வுடன் இணைந்து , 'ஃபார்ஸி' தொடருக்கான கதையை  எழுதியுள்ளனர்.

Mimicry Artist TSK dubbed for Vijay Sethupathi in Farzi Web Series

சமீபத்தில் வெளியான இந்த தொடரின் டிரெய்லர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த டிரெய்லர் & தொடரில் நடிகர் விஜய் சேதுபதிக்கு தமிழில் பிரபல மெமிக்ரி கலைஞர் TSK எனும் திருச்சி சரவணகுமார் டப்பிங் பேசியுள்ளார். இது குறித்து தனது முகநூல் பக்கத்தில், "நடிகர் விஜய் சேதுபதி அண்ணாவுக்கு ஃபர்ஸி தொடரில் தமிழ் & தெலுங்கில் டப்பிங் பேசியுள்ளேன் ❤️ சேது அண்ணா லெவல்க்கு அவர் குரலை மேட்ச் பண்ண முடியாது, நான் அதை முயற்சித்துள்ளேன்✌️ அவர் மற்ற பட கமிட்மென்ட்களில் பிஸியாக இருக்கிறார், எனவே அவருக்கு டப்பிங் செய்ய இயக்குனர்கள் ராஜ் & டிகே சார், விஜய் சேதுபதி அணணாவின் அனுமதி பெற்றோம்.   வழக்கம் போல ❤️ என்னை ஆதரியுங்கள் ❤️❤️❤️" என சரவணகுமார் பதிவிட்டுள்ளார்.

Also Read | ஜிகர்தண்டா டபுள் X பட ஷூட்டிங்.. நடிகர் லாரன்ஸ் பற்றி SJ சூர்யா வைரல் பதிவு! தெறி அப்டேட்ஸ்

தொடர்புடைய இணைப்புகள்

Mimicry Artist TSK dubbed for Vijay Sethupathi in Farzi Web Series

People looking for online information on Farzi, Farzi Web Series, Mimicry Artist TSK, TSK, Vijay Sethupathi will find this news story useful.