www.garudabazaar.com
iTechUS

விக்ரமனிடம் சீரியஸா பேசிய அமுது.. சைலண்டா மகேஷ்வரி சொன்ன கமெண்ட்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

Maheshwari humorous comment to Amudhu while he talking

Also Read | "ஒன்னும் கிழிக்க முடியல.. அதுனால அனுப்பிட்டாங்க".. மணிகண்டா vs மகேஷ்வரி.. biggboss

இந்த போட்டி சுமார் 90 நாட்களை கடந்து விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் வேளையில், கடந்த வாரம் ADK பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார். முன்னதாக Ticket To Finale டாஸ்க்கில் வெற்றி பெற்ற அமுதவாணன், முதல் ஆளாக Finale சுற்றுக்கு முன்னேறி இருந்தார். இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அசல் கோலார், GP முத்து, மெட்டி ஒலி சாந்தி, ராபர்ட் மாஸ்டர், தனலட்சுமி, மணிகண்ட ராஜேஷ், குயின்சி, ராம், ஷெரினா,  நிவாஷினி மற்றும் மகேஷ்வரி ஆகியோர் கடந்த வாரம் ரீ எண்ட்ரி கொடுத்திருந்தனர்.

இதனால் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறிய நிலையில், அடுத்தடுத்து நடைபெற்ற சுவாரஸ்யமான டாஸ்க்குகளால் வீட்டுக்குள் சில வாக்குவாதங்களும் ஏற்பட்டன. குறிப்பாக, கடந்த வாரம் Sacrifice டாஸ்க் ஒன்று நடைபெறுகிறது. அதாவது பிக் பாஸ் செய்யும் விஷயத்தை அனைவரும் கண்டிப்பாக செய்ய வேண்டும் என்பது தான் அது. அதன்படி, அசிமை பனியன், லுங்கி மட்டும் அணிந்திருக்கும் படியும், மேக்கப் போடவோ தலை சீவவோ கூடாது என சொல்லப்பட்டிருந்தது.

Maheshwari humorous comment to Amudhu while he talking

அதேபோல, அமுதவாணனுக்கு தனது தலைமுடிக்கு கோல்டன் நிறத்தில் வர்ணம் பூசிக்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் வார இறுதி நாட்களில் வழக்கம்போல கமல் தோன்றி கடந்த வாரம் நடைபெற்றவை குறித்து போட்டியாளர்களுடன் உரையாடினார். அப்போது இந்த வாரம் ADK வீட்டில் இருந்து வெளியேறுவதாகவும் கமல் தெரிவித்திருந்தார். இதனால் சக போட்டியாளர்கள் சோகமடைந்தனர்.

இந்நிலையில், வீட்டுக்குள் பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் விக்ரமன், அமுதவாணன், மகேஷ்வரி மற்றும் ஷிவின் ஆகியோர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கின்றனர். அப்போது அமுது,"ஐயா இது என்னைய என்ன கேட்டுச்சுன்னு  பாத்தீங்களா" என விக்ரமனிடம் கேட்கிறார். அப்போது படுத்திருந்த விக்ரமன்,"என்ன கேட்டுச்சுன்னு சொல்லுங்க. சும்மா கேளுங்க கேளுங்கன்னு மட்டும் சொல்றீங்க" என கேட்கிறார்.

Maheshwari humorous comment to Amudhu while he talking

அப்போது,"அதை சொன்னா நான்தானே கேஸ் வாங்குவேன். அதை சொல்ல சொல்லுங்க" என அமுது சிரித்துக்கொண்டே சொல்ல,  மகேஷ்வரி," ஏங்க ஏதாவது வேணும்னா நீங்களே கேளுங்க. சும்மா விக்ரம் நீங்க கேளுங்கன்னு சொல்லிட்டு இருக்கீங்க" என்கிறார்.

அவருக்கு பதில் அளிக்கும் அமுது,"நான் அதை கேட்டுட்டேன். அது முடியாம தான் அவரை கேட்க சொல்லுறேன்" என சிரித்தபடியே சொல்ல அங்கிருந்த அனைவரும் இதை கேட்டு சிரிக்கின்றனர்.

Also Read | "நீங்க பண்றதே Cringe மாதிரி தான் இருக்கு".. வெளிப்படையா மைனாவிடம் போட்டுடைத்த மகேஸ்வரி!!

தொடர்புடைய இணைப்புகள்

Maheshwari humorous comment to Amudhu while he talking

People looking for online information on Amudhavanan, Bigg boss 6 tamil, Bigg Boss Tamil, Bigg Boss Tamil 6, Maheshwari, Vikraman will find this news story useful.