உடலை நடனம் மூலம் மிதக்க வைக்க முடியுமா? மணிரத்னம் நாயகியின் லேட்டஸ்ட் Video பாருங்க!
முகப்பு > சினிமா செய்திகள்நடனத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டபடமான சிருங்காரம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பத்து ஆண்டுகளுக்கு முன் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. பின்னர் வஸீர் உள்ளிட்ட பல பாலிவுட் திரைப்படங்களில் நடித்தார். மீண்டும் 2017 ஆம் ஆண்டில் வெளியான மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தின் மூலம் கோலிவுட்டில் ரீஎன் ட்ரி ஆனார்
அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் செக்கச் சிவந்த வானத்தில் நடித்தார், சமீபத்தில் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சைக்கோ படம் இவருக்கு ரசிகர்களிடையே நல்ல பெயரை பெற்றுத் தந்தது. தற்போது துல்கர் சல்மானுடன் ஹே சினாமிகா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.
எப்போதுமே நடனக் கலைஞரான தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள விரும்புகிறவர் அதிதி. அண்மையில் அவர் வெளியிட்ட இன்ஸ்டா போஸ்டில் தனது குரு லீலா சாம்சனுக்கு நன்றி செலுத்தும் வகையில் டான்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்,
அந்த அழகான வீடியோவுக்கு இந்த நீண்ட கவித்துவமான தத்துவமான கேப்ஷனை வைத்தார் அதிதி. அதில் “டான்ஸ் ஆடுவதைப் பார்க்கும் போது பொதுவாக இசையைக் கேட்க முடிவதில்லை. என் குரு லீலா சாம்சனின் பிறந்தநாளுக்காக நான் ஒரு டான்ஸ் வீடியோவைப் பதிவு செய்துகொண்டிருந்தபோது, திடீரென்று இசையை அணைத்தேன். பாயும் நீரின் சத்தம் இந்த அர்த்தநாரீஸ்வர் அஷ்டகத்தை எனக்கு நினைவூட்டியது.
பாய்ந்து வழியும் நீரின் ஓசை, பாயும் உலக இயக்கம் மற்றும் உயிர்களின் பாலினம் - இதுவே அர்த்தநாரீஸ்வரின் தத்துவம். ஐந்து வயதிலிருந்தே பழக்கமான, நான் இன்னும் கூட சொதப்பும், என் குருவின் நடனத்தை மீண்டும் ஆடுவதை சுவாசிப்பதைப் போல இயல்பாக உணர்கிறேன்’ என்று பதிவிட்டுள்ளார் அதிதி.