அவராலதான் இந்த மாதிரி மேஜிக்கலா டான்ஸ் ஆட முடியும்! சிம்புவை புகழ்ந்த மாஸ்டர்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களுள் ஒருவர் நடிகர் சிம்பு.  தனது திறமையாலும், அதிரடி பேச்சாலும் பல ரசிகர்களைக் கவர்ந்தவர். ‘எஸ்.டி.ஆர்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவர் அவர்.

dance master satheesh praises simbu for his dance step

 2010 -ம் ஆண்டு வெளியான பிளாக்பஸ்டர் படமான ‘விண்ணை தாண்டி வருயாயா’வின் தொடர்ச்சியான ‘கார்த்திக் டயல் செய்த எண் ’என்ற குறும்படத்தில் சமீபத்தில் நடித்தார். இந்தப் படம் பார்வையாளர்களிடமிருந்து பலத்த வரவேற்பைப் பெற்றது, யூடியூப்பில் 7 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிம்பு  வெங்கட் பிரபுவின்  மாநாடு படப்பிடிப்பில் மும்முரமாக இருந்தார், கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஏற்பட்ட லாக்டவுனால் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டது. 

கடந்த 2019 ஆம் ஆண்டு சிம்பு நடிப்பில் வெளியான படம் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’. இப்படம். கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தில் கேதரின் திரேசா, ரம்யா கிருஷ்ணன், பிரபு, நாசர், மகத் ராகவேந்திரா,  யோகி பாபு ஆகியோருடன் மேகா ஆகாஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். 

இந்நிலையில், பிரபல நடன இயக்குனர் சதீஷ் தனது இன்ஸ்டாகிராமில் வந்தா ராஜாவாதான் வருவேன் படத்திலிருந்து STR-ன் நடன ஒத்திகை  வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.. ஒரு அட்டகாசமான ஸ்டெப் போட்டவுடன் மகிழ்ச்சியில் அவரை முத்தமிட்ட சதீஷ் சிம்புவின் மீது அன்பை பொழிவதைக் காணலாம். அந்த வீடியோவில் அவர் கூறியது, என்னா இருந்தாலும் #Str உடன்  நடனம் என்பது ஆகச் சிறந்த இன்பம். நான் என்ன ஸ்டெப் கொடுத்தாலும் அதை ஒரு சில நிமிடங்களில் ஆடி மேஜிக் ஆக்கிவிடுவார்,’ என்று பதிவிட்டுள்ளார்

 

சிம்புவின் இந்த க்யூட் வீடியோ ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட தற்போது டிவ்ட்டர்வாசிகள் பாராட்டி வருகின்றனர்

மேலும் செய்திகள்

dance master satheesh praises simbu for his dance step

People looking for online information on Covid 19, Simbu, Vantha Rajavathaan Varuven will find this news story useful.