ஆர்யா - சாயிஷா ஜோடி சேர்ந்துள்ள படத்துலருந்து ஒரு மெலோடி பாட்டு - இமான் தகவல்
முகப்பு > சினிமா செய்திகள்By Karthikeyan S | Dec 21, 2019 10:57 PM
'மகாமுனி' படத்துக்கு பிறகு ஆர்யா தற்போது இயக்குநர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் 'டெடி' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது ரியல் ஜோடி சாயிஷா நடிக்கிறார். இந்த படத்தில் சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்நிலையில் இந்த படம் குறித்து டி.இமான் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், டெடி படத்துக்காக பிரதீப் குமார் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடியுள்ள பாடல் தற்போது பதிவு செய்யப்பட்டது. மதன் கார்க்கி இந்த பாடலை எழுதியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார். பிரதீப் குமார் 'மேயாத மான்', 'ஆடை', 'சில்லுக்கருப்பட்டி' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைப்பாளராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.