ஆர்யா தன் மனைவியுடன் இணைந்து நடிக்கும் ’டெடி’ படத்தின் வித்தியாசமான ஃபர்ஸ்ட் லுக் இதோ
முகப்பு > சினிமா செய்திகள்By Aswin | Dec 10, 2019 06:52 PM
ஆர்யா சாயிஷா இணைந்து நடிக்கும் ’டெடி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகி உள்ளது.

ஆர்யா, சாந்தகுமாரின் இயக்கத்தில் நடித்த ’மகா முனி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து வெளியான ’காப்பான்’ படத்தில் இவர் சூர்யாவுடன் இணைந்து நடித்திருந்தார்.
இதை அடுத்து ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தாயாரித்த ’டெடி’ படத்தில் இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக அவர் மனைவி சாயிஷா நடித்துள்ளார். இருவரும் திருமணத்துக்கு பிறகு ஒன்றாக நடிக்கும் படம் என்பதால் அது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
இப்படத்தை நாணயம், நாய்கள் ஜாக்கிரதை, டிக் டிக் டிக் படங்களை இயக்கியனர் சக்தி சவுந்தர் ராஜன் இயக்கும் இப்படத்துக்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.
தற்போது வெளியாகி இருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கையில் துப்பாக்கியோடு நிற்கும் ஆர்யாவுக்கு பின்னா ஒரு டெடி ஒளிந்திருப்பது போல வித்தியாசமாக அமைந்துள்ளது.
#TeddyFirstLook is here!! Hope you love it! Such a special movie! 🧸❤️❤️ @arya_offl @ShaktiRajan @kegvraja @NehaGnanavel @immancomposer @actorsathish @actorkaruna @madhankarky pic.twitter.com/nwyXX0yO0p
— Sayyeshaa (@sayyeshaa) December 10, 2019