மனைவி சாயிஷாவுடன் இணைந்து நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட் சொன்ன ஆர்யா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'மகாமுனி' படத்துக்கு பிறகு ஆர்யா தற்போது இயக்குநர் சக்தி சௌந்தரராஜன் இயக்கத்தில் 'டெடி' படத்தில் நடித்து வருகிறார்.  இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

Arya and Sayyeesha's Teddy movie Shooting wrapped

இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக அவரது ரியல் ஜோடி சாயிஷா நடிக்கிறார். இந்த படத்தில் சதீஷ், கருணாகரன், சாக்ஷி அகர்வால் ஆகியோர்  முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக ஆர்யா தனது ட்விட்டர் பக்கம் வாயிலாக அறிவித்துள்ளார். படக்குழுவினருடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார்.