Reliable Software
www.garudabazaar.com

இவங்க தான் நான்காவது Finalist... வைல்டு கார்டு சுற்றின் முடிவை வெளியிட்ட நடிகை ஷகீலாவின் பதிவு...!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தற்போது semi-finals முடிந்துள்ளது  ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது. ஏனென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் கவலைகளை மறந்து சிரிக்க இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அருமருந்தாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். எனவே இன்னும் சில எக்ஸ்ட்ரா வாரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் கூட நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அதேபோல்  சீக்கிரமே வைல்டு கார்டு சுற்று நடைபெற இருக்கிறது.

cooku with comali fourth finalist revealed நடிகை ஷகீலாவின் பதிவு

இந்நிலையில் வைல்டு கார்டு சுற்றுக்கான புரோமோக்களை  தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாக்கி வருகிறது. இந்நிலையில் இந்த வைல்டு கார்டுசுற்றில் மதுரை முத்து, பவித்ரா, தர்ஷா குப்தா, தீபா, ஷகிலா மற்றும் ரித்திகா பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த கடினமான போட்டியில் வென்று யார் அந்த பிரமாண்ட பைனல்ஸ் சுற்றுக்கு செல்வார்கள் என்று ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர். ஏற்கனவே அஸ்வின், கனி மற்றும் பாபா பாஸ்கர் மூவரும் கடைசி சுற்றுக்கு நேரடியாக தேர்வாகியுள்ளனர். இந்நிலையில் நடிகை ஷகிலா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார். வைல்டு கார்டு சுற்றில் வென்று பைனல்ஸ் சென்ற ஷகிலாவிற்கு வாழ்த்து தெரிவித்த ஒரு பதிவை அவர் மீண்டும் பகிர்ந்துள்ளார். இதன்மூலம் இந்த சீசனில் நான்காவது நபராக இறுதி போட்டிக்கு செல்பவர் ஷகிலா தான் என்பது தெரிகிறது. இந்நிலையில் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்!

இவங்க தான் நான்காவது FINALIST... வைல்டு கார்டு சுற்றின் முடிவை வெளியிட்ட நடிகை ஷகீலாவின் பதிவு...! வீடியோ

Tags : Shakeela

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

cooku with comali fourth finalist revealed நடிகை ஷகீலாவின் பதிவு

People looking for online information on Shakeela will find this news story useful.