Reliable Software
www.garudabazaar.com

"ரியோ போலியா இருக்கான்னு சிலர்".. எமோஷனலான தீபா அக்கா... போட்டு உடைத்த உண்மைகள்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கடந்த வாரம் semi-finals முடிந்துள்ளது ரசிகர்களுக்கு சோகத்தை அளித்துள்ளது. ஏனென்றால் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தற்போது மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. ஒவ்வொரு வார இறுதியிலும் கவலைகளை மறந்து சிரிக்க இந்த நிகழ்ச்சி ஒரு பெரிய அருமருந்தாக இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். புகழ், பாலா, ஷிவாங்கி, மணிமேகலை என கடந்த சீசனில் இருந்த கோமாளிகள் இந்த சீசனிலும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமைக்க படாதபாடு படும் காட்சிகள் ரசிகர்களை குலுங்கி, குலுங்கி சிரிக்க வைக்கிறது. இந்நிலையில் இந்த ஷோவிற்காக ரசிகர்கள் காத்திருந்து பார்க்கும் அளவிற்கு மிகப்பெரிய ரீச் அடைந்துள்ளது.எனவே இன்னும் சில எக்ஸ்ட்ரா வாரங்கள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றால் கூட நன்றாக இருக்கும் என்று ரசிகர்கள் கருதுகின்றனர். அதேபோல் இந்த வாரம் வைல்டு கார்டு சுற்று நடைபெற்று  வருகிறது.

rio and deepa emotional cooku with comali எமோஷனலான தீபா அக்கா

இந்நிலையில் இந்த வைல்டு கார்டு சுற்றில் மதுரை முத்து, பவித்ரா, தர்ஷா குப்தா, தீபா, ஷகிலா மற்றும் ரித்திகா பங்கு பெற்றுள்ளனர். இந்நிலையில் இந்த வாரம் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பிக்பாஸ் பிரபலம் ரியோ பங்கு பெற்றிருந்தார். அவர் விஜய் டிவியில் நுழைந்த பொழுது சரவணன் மீனாட்சி தொடரில் நடித்தார் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இதனையடுத்து போட்டியாளர் தீபா கூறும்பொழுது "ரியோ கட்டிப்பிடிக்கும் போது ஒரு தாயின் அரவணைப்பை உணரமுடியும். அவர் அமைதியாக இருக்கிறார் என்று பலரும் அவரைப் பற்றி பேசுகின்றனர். ஆனால் அவரது குணமே அதுதான். சரவணன் மீனாட்சியில் நாங்கள் இருவரும் ஒரு வருடத்திற்கும் மேலாக பணியாற்றி உள்ளோம். அவரை அப்பொழுது பார்த்தது போல தான் இப்பொழுதும் இருக்கிறார். ஏதாவது சிறிய பிரச்சினை என்றாலும் அமைதியாக இருந்துவிடுவாரே தவிர யாரிடமும் கோபப்பட மாட்டார். அவரது குணம் பற்றி தெரியாமல் தவறாக பேசுவது என்ன" என்று எமோஷனலாக பேசியுள்ளார். இந்நிலையில் நடிகர் ரியோ கூறும்போது "ஆம் நாங்கள் இருவரும் இரண்டரை வருடத்திற்கு மேல் சரவணன் மீனாட்சி சீரியலில் ஒன்றாக நடித்துள்ளோம். அக்காவை எனக்கு நன்றாக தெரியும்" என்று அவரும் எமோஷனலாக கூறியது குறிப்பிடத்தக்கது.

"ரியோ போலியா இருக்கான்னு சிலர்".. எமோஷனலான தீபா அக்கா... போட்டு உடைத்த உண்மைகள்..! வீடியோ

Tags : Rio

தொடர்புடைய இணைப்புகள்

rio and deepa emotional cooku with comali எமோஷனலான தீபா அக்கா

People looking for online information on Rio will find this news story useful.