Reliable Software
www.garudabazaar.com

குக் வித் கோமாளி அஸ்வின் இந்த படங்களில் எல்லாம் நடிச்சிருக்காரே.. நோட் பண்ணி இருக்கீங்களா..?!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி பற்றி தெரியாதவர்களே இருக்க முடியாது. வரவர பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு இணையான ரசிகர் பட்டாளம் இந்த நிகழ்ச்சிக்கும் உருவாகியுள்ளது. இந்நிலையில் குக் வித் கோமாளியின் இந்த சீசனை ஷிவாங்கி, அஸ்வினுக்காகவே பலரும் பார்க்கின்றனர் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு அஸ்வினுக்காக ஷிவாங்கியும் சுனிதாவும் போட்டி போட்டுக் கொள்ளும் சிறு சிறு சண்டைகளும் வயிற்றை பதம் பார்க்கும் அளவிற்கு சிரிப்பை வரவழைக்கிறது. ஏற்கனவே ஷிவாங்கிக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் அஸ்வின் ஷிவாங்கி செய்யும் கூடுதல் குறும்புகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

Cooku with comali ashwin had acted in these அஸ்வின் இந்த படங்களில் நடிச்சிருக்காரே

Behindwoods Gold Icons விருது விழாவிற்கு வந்த அஸ்வினுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இன்ஸ்டாகிராமில் அவரது கணக்கு மில்லியன் Follower-களை எட்டியுள்ள நிலையில் அவருக்கு விஜய் டிவி பிரபலங்களும், குக் வித் கோமாளி போட்டியாளர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால் உண்மையில் நீண்டகாலமாகவே அஸ்வின் திரைத்துறையில் இருந்து வந்துள்ளார். அவருக்கு குக் வித் கோமாளி  நிகழ்ச்சி மிகப்பெரிய பிரேக்கிங் ஆக அமைந்துள்ளது. தற்பொழுது அவருக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில்இந்த ரியாலிட்டி ஷோ மூலம் பிரபலமாவதற்கு முன்பு, துல்கர் சால்மான் நடித்த இயக்குனர் மணிரத்னத்தின் 'ஓகே கண்மணி' மற்றும் துருவ்வின் 'ஆதித்ய வர்மா' படத்திலும் சிறிய வேடத்தில் நடித்துள்ளார். விஜய் டிவியில் சில மாதங்கள் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

Cooku with comali ashwin had acted in these அஸ்வின் இந்த படங்களில் நடிச்சிருக்காரே

குக் வித் கோமாளி அஸ்வின் இந்த படங்களில் எல்லாம் நடிச்சிருக்காரே.. நோட் பண்ணி இருக்கீங்களா..?! வீடியோ

Tags : Ashwin

தொடர்புடைய இணைப்புகள்

Cooku with comali ashwin had acted in these அஸ்வின் இந்த படங்களில் நடிச்சிருக்காரே

People looking for online information on Ashwin will find this news story useful.