Video: 'இவங்களுக்கு இப்படி ஒரு தாய் மனசா?'.. ‘ஷூட்டிங் ஸ்பாட்டில்’ ஷகிலாவின் நெகிழவைக்கும் வீடியோ!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித் கோமாளி படப்பிடிப்பு தளத்தில் நடிகை ஷகிலாவின் மடியில் நடிகை மணிமேகலை படுத்து உறங்கிய காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Shakeela gesture wins heart cook with comali ஷகிலாவின் தாய் மனம்

பெரும்பாலும் டிவி பார்க்க விரும்பாதவர்கள் கூட விஜய் டிவியின்  குக் வித் கோமாளி நிகழ்ச்சியை விரும்பி பார்க்கின்றனர். வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த ரியாலிட்டி ஷோவில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை.

இந்த ஷோ மூலம் சிவாங்கி, புகழ், மணிமேகலை, பாலா அனைவரும் மக்கள் மத்தியில் பரவலாக அறியப்பட்டு உள்ளனர். குறிப்பாக மணிமேகலை முதலாவது சீசனில் இருந்து இப்போது ஒளிபரப்பாகி வரும் இரண்டாவது சீசன் வரை இந்த நிகழ்ச்சியில் தொடர்ந்து இடம் பெற்று வருகிறார். வரும் வாரத்தில் கார்ட்டூன் கதாபாத்திரங்களையும் சூப்பர் ஹீரோ கதாபாத்திரங்களையும் குக் வித் கோமாளி போட்டியாளர்கள் பிரதிபலிக்க உள்ளனர்.

படப்பிடிப்பு தளத்தில் இந்த நடிகர்கள் மற்றும் பிரபலங்கள் எடுத்துக்கொள்ளும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையதளத்தில் எப்போதுமே ட்ரெண்டிங் ஆவதுண்டு. அந்த வரிசையில்தான் படப்பிடிப்பு தளத்தில் ஒரு சிறிய இடைவேளை நேரத்தில், ஓய்வாக அமர்ந்து கொண்டிருக்கும் ஷகிலாவின் மடியில் மணிமேகலை அயர்ந்து உறங்கிக் கொண்டிருக்கிறார். ஷகிலாவோ மிகவும் இயல்பாக அங்கு தம்மைச் சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டிருக்கிறார்.

Shakeela gesture wins heart cook with comali ஷகிலாவின் தாய் மனம்

சோட்டா பீம் கதாபாத்திரத்தின் உடையை அணிந்து சமையல் செய்த மணிமேகலை இரவு பதினோரு மணி ஆகிய நிலையில் சமைத்த அயர்ச்சியில் ஷகிலாவின் மடியில் படுத்து உறங்கியதாகக் கூறி இந்த வீடியோ பகிரப்பட்டுள்ளது.‌

பார்ப்பதற்கு நெகிழ்ச்சியாகவும் க்யூட்டாகவும் இருக்கும் இந்த வீடியோவை பார்த்த பலரும் ஷகிலாவுக்கு இப்படி ஒரு தாய் மனசா என்று ஆச்சர்யப்பட்டு வருகின்றனர். “உண்மையில் ஷகிலா வாழ்க்கையில் நிறைய கஷ்டப்பட்டு இருக்காங்க” என்றும், “பார்ப்பதற்கு எவ்வளவு அருமையாக இருக்கிறது இந்த வீடியோ!” என்றும் பலர் கமெண்டுகளில் குறிப்பிட்டுள்ளனர்.

ALSO READ: இன்ஸ்டாவில் ஜாலி நேரலை.. சித்ரா பற்றி கேட்ட அடுத்த நொடியே எமோஷன் ஆன பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை!

VIDEO: 'இவங்களுக்கு இப்படி ஒரு தாய் மனசா?'.. ‘ஷூட்டிங் ஸ்பாட்டில்’ ஷகிலாவின் நெகிழவைக்கும் வீடியோ! வீடியோ

மேலும் செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

Shakeela gesture wins heart cook with comali ஷகிலாவின் தாய் மனம்

People looking for online information on Actress, குக் வித் கோமாளி, மணிமேகலை, விஜய் டிவி, ஷகிலா, CookWithComali, Heartfelt, Manimegalai, Shakeela, Shooting, Trending, Vijaytv, Viral will find this news story useful.