www.garudabazaar.com

எனக்கு தோல்வியே இல்ல; ஒன்னு ஜெயிக்கிறேன், இல்லன்னா…?- கான்பிடன்ஸ் மோடில் புகழ்!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

குக் வித கோமாளி புகழ் சமூகவலைதளத்தில் பகிர்ந்த புகைப்படமும் கேப்ஷனும் கவனத்தை ஈர்த்துள்ளன.

Cook with comali pugazh said he never give up

"இப்ப புல்லரிக்குது அப்பச்சிக்கும் ஆத்தாவுக்கும்.." எமோஷனலான சூர்யா.. வீடியோ

குக் வித் கோமாளி சீசன் 2:

விஜய் தொலைக்காட்சியில் தொடர்ந்து மூன்று சீசன்களாக வெற்றிநடை போட்டு வரும் நகைச்சுவை ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. அதிலும் சீசன் 2 மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த சீசனின் அஷ்வின், ஷிவாங்கி மற்றும் புகழ் ஆகிய மூவருக்கும் ஏராளமான ரசிகர்கள் சமூகவலைதளங்களில் உருவாகி அவர்களின் நகைச்சுவைக் காட்சிகள் அதிகள்வில் பகிரப்பட்டன.

Cook with comali pugazh said he never give up

குக் வித் கோமாளி டு சினிமா:

அந்த மூவரில் அஷ்வின் சினிமாவில் ஹீரோவாகிவிட்டார். ஷிவாங்கியும் சிவகார்த்திகேயனின் டான் சினிமா மூலமாக அறிமுகமாகிறார். அதுபோலவே புகழ் ஏற்கனவே பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். உச்ச நட்சத்திரமான் அஜித்தோடு அவர் நடித்த வலிமை படம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியாகி அவரது கதாபாத்திரத்துக்கு வரவேற்புக் கிடைத்தது. இந்நிலையில் இப்போது புகழ்  விரைவில் ரிலீஸ் ஆகவுள்ள பெரிய நட்சத்திரங்களின் படங்களான எதற்கும் துணிந்தவன், யானை, டான் உள்ளிட்ட ஏராளமான படங்களில் நகைச்சுவை வேடங்களில் நடித்து வருகிறார்.

குக் வித் கோமாளி சீசன் 3- ல் புகழின் சர்ப்ரைஸ் விசிட்:

இதற்கிடையில் குக் வித் கோமாளி சீசன் 3 தொடங்கியுள்ளது. இந்த சீசனில் அவர் முதலில் போட்டியாளராகக் கலந்துகொள்ளவில்லை. அதனால் ரசிகர்கள் பலரும் அவரை மிஸ் பண்ணுவதாக பேசப்பட்ட நிலையில் சர்ப்ரைஸாக தோன்றி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். மேலும் இந்நிகழ்ச்சியில் அவ்வப்போது வருகை தருவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Cook with comali pugazh said he never give up

கவனத்தை ஈர்த்த இன்ஸ்டா பதிவு:

இந்நிலையில் சமூகவலைதளமான இன்ஸ்டாகிராமில் சமீபத்தில் ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். கோட் சூட் போட்டு ஸ்டைலாக தோற்றமளிக்கும் அந்த புகைப்படத்தின் கீழ் அவர் பகிர்ந்திருந்த கேப்ஷன் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. அதில் ‘நான் எதிலும் தோற்றுப் போவதில்லை. ஒன்று வெற்றி பெறுகிறேன் அல்லது கற்றுக் கொள்கிறேன்’ எனக் கூறியுள்ளார். இந்த கேப்ஷனுக்கு பல ரசிகர்களும் பாஸிட்டிவ்வான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

புகழின் கடின உழைப்பு:

ஊரில் இருந்து சினிமா ஆசையோடு சென்னைக்கு வந்து கார் மெக்கானிக்காக சில வருடங்கள் வேலை செய்து பின்னர் கிடைத்த சிறு சிறு வேடங்களைப் பயன்படுத்தி இப்போது சினிமாவில் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகராக புகழ் தன் வாழ்க்கையில் உயர்ந்துள்ளார். இப்படி படிப்படியாக வளர்ந்துள்ள அவர் தன் வாழ்க்கையில் கற்ற தோல்விகளை கற்றுக்கொள்ளும் வாய்ப்பாக பார்த்ததால் இந்த உயரத்தை அடைந்துள்ளார். எனவே அவர் போட்டிருக்கும் கேப்ஷன் அவர் வாழ்க்கைக்கு சரியாக பொருத்தமான வாசகம்தான்.

மருமகளால புது பிரச்சனை ‌.. அத்தை சொன்ன ஷாக் விஷயம்‌‌.. ரண களமான பாக்கியலட்சுமி வீடு

தொடர்புடைய இணைப்புகள்

Cook with comali pugazh said he never give up

People looking for online information on குக் வித் கோமாளி, குக் வித் கோமாளி புகழ், Cook with comali, Cook with comali pugazh will find this news story useful.