கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து தான் முற்றிலும் குணமடைந்துவிட்டதாக ஹாலிவுட் நடிகை ஓல்கா குரிலென்கோ தெரிவித்து இருக்கிறார்.

ஜேம்ஸ்பாண்ட் படமான குவான்டம் ஆஃப் சொலேஸ் படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஓல்கா குரிலென்கோ. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டதாக சமூக வலைதளத்தில் தெரிவித்திருந்தார். இவர் குணமடைய வேண்டும் என பலரும் பிராத்தனைகளை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் தற்போது தான் முழுவதுமாக குணமடைந்துவிட்டதாக தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் ஓல்கா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் “காய்ச்சல் மற்றும் கடும் தலைவலியால் ஒரு வாரம் படுக்கையில் மிகவும் சிரமப்பட்டேன். இரண்டாவது வாரம் இருமலுடன் மிகவும் சோர்வாக காணப்பட்டேன். இரண்டாவது வார முடிவில் இருமல் மட்டும் தான். பகல் நேரத்தில் ஆரோக்கியமாக இருப்பதை உணர்கிறேன். தற்போது முற்றிலும் குணமடைந்துவிட்டேன். என் மகனுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுகிறேன்” என தெரிவித்துள்ளார்.