திடீரென்று முதல்வரை சந்தித்த காமெடி நடிகர் யோகிபாபு... காரணம் இதுதான்..!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தனக்கென்று ஒரு இடம் பிடித்து உயர்ந்து நிற்பவர் நடிகர் யோகி பாபு. இவரது கால்ஷீட்டுக்காக பல பெரிய நிறுவனங்கள் கூட காத்திருக்கிறது. பல படங்களில் ஓயாமல் நடித்து வந்த அவர் கடந்த மாதம் ரசிகர்களுக்கு ஒரு ஷாக் கொடுத்தார்.

முதல்வரை நேரில் சந்தித்த காமெடி நடிகர் யோகிபாபு Comedy Actor Meets Cheif Minister for this reason

ஆம் திருமணத்திற்காக பெண் பார்த்து வந்த அவர், பிப்ரவரி மாதம் 20-ம் தேதி தனது உறவினரான மஞ்சு பார்கவியை திருமணம் செய்துக் கொண்டார். திரையுலகினர் யாரும் இல்லாமல் இந்த திருமணம் நடைப்பெற்றது.

இந்நிலையில் தற்போது அவர் திரையுலகம் மற்றும் பிரபலங்களை அழைத்து திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த திட்டமிட்டுள்ளார். அதன்படி சமீபத்தில் நடிகர் விஜய்காந்தை சந்தித்து அழைப்பு வைத்தார். இந்நிலையில் தற்போது அவர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.

Entertainment sub editor