சிகிச்சை அளித்து இறந்த மருத்துவர்களுக்கு இந்த நிலையா.? - மிகப்பெரிய விஷயம் செய்த விஜயகாந்த்.
முகப்பு > சினிமா செய்திகள்நடிகர் விஜயகாந்த் கொரோனா வைரஸால் இறந்தவர்களுக்காக உதவ முன்வந்துள்ளார்.
உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதையடுத்து ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் காரணமாக இறப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் காரணமாக இறந்த மருத்துவரின் உடலை புதைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.
இந்நிலையில் நடிகர் விஜயகாந்த இறந்தவர்களுக்காக களமிறங்கியுள்ளார். இதையடுத்து இறந்தவர்களின் உடலை புதைக்க மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், தனது ஆண்டாள் அழகர் கல்லூரியின் ஒரு பகுதியை எடுத்து கொள்ளலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் நேரத்தில் நமக்காக வேலை செய்பவர்களுக்கு இப்படி நடப்பது குறித்தும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். விஜயகாந்தின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நல்ல தலைவருக்கு ஓர் எடுத்துக்காட்டு விஜயகாந்த் Sir ❣️❣️❣️ @iVijayakant @dmdkparty2005 #Vijayakant #AndalAlagar #DMDK pic.twitter.com/RwYQuJs8Tv
— Haresh (@chnharesh) April 20, 2020