VIDEO : இது வேற லெவல் குட்டி ஸ்டோரி... மாஸ்டர் விஜய்க்கு காலேஜ் மாணவர்கள் கொடுத்த நடன விருந்து...!!
முகப்பு > சினிமா செய்திகள்இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். இந்தப் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார். வில்லனாக விஜய் சேதுபதி மிரட்ட இருக்கிறார். இந்தப் படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நடந்து முடிந்தது.

மாஸ்டர் படத்தின் பாடல்களை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட்டுள்ளார். அனைத்து பாடல்களையுமே ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிங்கிள் ஆக வெளிவந்த குட்டி ஸ்டோரி, வாத்தி கம்மிங், வாத்தி ரெய்டு பாடல்களையும் ரசிகர்கள் மிகவும் விரும்பினர். இந்நிலையில் மாஸ்டர் படம் வரும் 9 -ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. படத்திற்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ரசிகர்கள் அனைவரும் தங்களால் முடிந்த வகையில் படத்தை கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் குட்டி ஸ்டோரி பாடலுக்கு நடனம் ஆடியுள்ளது வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ உங்களுக்காக..!
#KuttiStory Dance Cover Done By SNSTC Clg Students . Its Really Superb Guys ❤️@actorvijay @Dir_Lokesh @anirudhofficial @Arunrajakamaraj @SonyMusicSouth @ashokparwani @MrRathna @Jagadishbliss @imKBRshanthnu
Full Video - https://t.co/TY9KkkaEst pic.twitter.com/jWpwzd9jNv
— Actor Vijay Universe (@ActorVijayUniv) March 17, 2020