க்ளாமருக்கு பஞ்சமில்லாத க்ளைமாக்ஸ் டீஸர் நிச்சயம் உங்கள் கவனத்தை ஈர்க்கும்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இந்த பயங்கரமான லாக்டவுன் காலங்களில், ஆர்ஜிவி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் இயக்குனர் ராம் கோபால் வர்மா ஒரு அட்டகாசமான ஆக்‌ஷன் திரில்லர் படமொன்றை ரசிகர்களுக்கான பரிசாக உருவாக்கியுள்ளார்.  

Climax a gift from Mila Malkova and Ram Gopal Varma

க்ளைமாக்ஸ்  (Climax) என்ற டைட்டிலுடைய இந்தப் படத்தில் அமெரிக்காவைச் சேர்ந்த ஃபோர்ன் ஸ்டாரான மியா மல்கோவாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளார் ராம் கோபால் வர்மா. முன்னதாக அவர்கள்  2018 -ஆம் ஆண்டில்  God, Sex and Truth என்ற ஆவணப் படத்தில் இணைந்து பணியாற்றினர். 

தனது சொந்த யூட்யூப் சானலில் க்ளைமாக்ஸின் டீஸரை வெளியிட்டு, அதனை தனது ட்விட்டரில்  பகிர்ந்துள்ளார் ஆர்.ஜி.வி. இந்த டீஸரிலன் முதல் காட்சியில் மியா மல்கோவா பிகினி உடை அணிந்து காணப்படுகிறார். பாலைவனம் போன்ற ஓரிடத்தில் ஏரோபிக் போன்ற உடற்பயிற்சி செய்கிறார். அடுத்து ஆபத்து என எச்சரிக்கை செய்யப்பட்ட ஒரு பிரதேசத்துக்குள் மியாவும் அவரது காதலரும் நுழைகின்றனர். அங்கிருந்த ஒரு குளத்தில் இருவரும் மகிழ்ச்சியுடன் குதிக்கின்றனர்.

அடுத்து அவர்கள் ஆபத்தை உணர்கிறார்கள். சிலர் அவர்களைத் துரத்த, உயிரைக் கையில் பிடித்தபடி ஓடுகிறார். டீஸரில் adult content உள்ளதாக எச்சரிக்கை முன்னரே தெரிவிக்கப்படுகிறது, முதல் காட்சியில் பிகினியில் தோன்றும் மியா கடைசி காட்சியிலும் இடையிடையே காண்பிக்கப்படும் சில காட்சிகளிலும் படு க்ளாமராக காண்பிக்கப்படுகிறார். இந்தப் படம் ஆக்‌ஷன் த்ரில்லர் என்பதாலும், மியா நடித்துள்ளதாலும், ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பில் உள்ளது.

இந்தப் படத்தின் டிரெய்லர் 2020 மே 18 அன்று காலை 9.30 மணிக்கு வெளியிடப்படும். இந்த ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தின் டீஸர் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து வைரலாகியுள்ளது. தற்போது வரை இந்த டீஸருக்கான பார்வையாளர்களின் எண்ணிக்கை 9,43,804 ஆக உயர்ந்துள்ளது

.

 

Entertainment sub editor