என்னது ! கொரோனா வைரஸ் 'பாகுபலி 2'வை தோற்கடிச்சிடுச்சா ? - வீடியோ மூலம் பிரபல இயக்குநர் நிரூபணம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

கொரோனா வைரஸின் தாக்கத்தில் இருந்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக திரைப்பட பிரபலங்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். எளிதில் பரவக்கூடிய நோய் என்பதால் மக்கள் பொது இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் அடிக்கடி கைகளை கழுவ வேண்டும் உள்ளிட்ட வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மற்றும் பாகுபலி 2வை ஒப்பிட்ட இயக்குநர் ராம் கோபால் வர்மா | Director Ram gopal Varma tweets about coronavirus beating ba

மேலும் தமிழக பள்ளிகளுக்கு வருகிற 31 ஆம் தேதி வரை விடுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து விதமான படப்பிடிப்புகளும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் இடம் என்பதால் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

இதன் ஒரு பகுதியாக பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மா அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியாவில் சூப்பர் மார்ட் ஒன்றில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வீடியோவை தனது  ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், ''இறுதியாக கொரோனா வைரஸ் பாகுபலி 2 வை பீட் பண்ணிடுச்சு, அமெரிக்கர்கள் ஷாப்பிங் மார்ட் ஒன்றில் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். பயமுறுத்தும் காட்சி'' என்று குறிப்பிட்டுள்ளார்.

Entertainment sub editor